தனியார் துறை வங்கிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐபிஓ வெளியீட்டிற்கு பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஐபிஓ மூலம் 1,58,27,495 புதிய பங்குகளும், பங்குதாரர்களிடம் இருந்து 12,505 பங்குகள் வரையிலும் விற்பனை செய்யப்படவுள்ளன.
புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் அந்த வங்கி 36 கோடி வரை திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிரா, கேரளா உட்பட 6 மாநிலங்களில் பெட்ரோல் மீதான வாட் குறைப்பு.. தமிழ்நாடு ஏன் குறைக்கல?
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்கு வெளியீட்டில் களம் இறங்க அனுமதி கோரி கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பம் செய்த நிலையில் இந்த வங்கியின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக செபி நேற்று தெரிவித்துள்ளது.
கிளைகள்
100 ஆண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 509 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 106 கிளைகள் கிராமப்புறத்திலும், 327 கிளைகள் நகர்ப்புறத்திலும், 76 கிளைகள் பெருநகர மையங்களிலும் உள்ளன. சுமார் 4.93 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 70 சதவீதம் வாடிக்கையாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வங்கியுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குகள் விற்பனை
டி.பிரேம் பழனிவேல், பிரியா ராஜன், பிரபாகர் மகாதியோ போப்டே, நரசிம்மன் கிருஷ்ணமூர்த்தி, எம்.மல்லிகாராணி மற்றும் சுப்பிரமணியன் வெங்கடேஸ்வரன் ஐயர் ஆகியோர் வசமுள்ள பங்குகள் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஓ
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஐபிஓ வெளியாகும் தகவல் வெளியானதும் முதலீட்டாளர்களிடம் பெரும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளதால் இந்த ஐபிஓவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.36 கோடி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஐபிஓ மூலம் ரூ.36 கோடி வரை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும், இந்த தொகையின் மூலம் குஜராத்தின் டிம்பாவில் அமைந்துள்ள அதன் உற்பத்தி வசதியை மேம்படுத்தவும், பாதுகாப்பற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தவும் நிறுவனத்தின் வணிகத்தை விரிவுபடுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tamilnad Mercantile Bank gets Sebi’s nod to float IPO
Tamilnad Mercantile Bank gets Sebi’s nod to float IPO | தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஐபிஓ: செபி அனுமதி