பலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் காய்கறி தான் பீட்ரூட். சிலர் பச்சையாகவோ, சிலர் வேக வைத்தோ, இன்னும் சிலர் ஜூஸ் வடிவிலோ உட்கொள்வார்கள்.
பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.
இது பசலைக்கீரை குடும்பத்தைச் சேர்ந்தது. பீட்ரூட் உடலை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி, இரத்த சோகையைப் போக்கும் மற்றும் பல நன்மைகளை வாரி வழங்கும்.
ஆகவே பலரும் இதனை தங்களது டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.
ஆனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பீட்ரூட் சாப்பிடுவது நல்லதா? தீமையா ? என்ற குழப்பம் காணப்படும். உண்மையில் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதா என்பதை தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடலாம்?
பீட்ரூட் சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது சத்தான கூறுகள் நிறைந்தது. சுவையில் இதில் இனிப்பு இருந்தாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
ஏனெனில் பீட்ரூட் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தையும் இது சீராக்குகிறது. இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், இது, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. பீட்ரூட் சாப்பிடுவது உடலுக்கு சக்தியைத் தருகிறது. இதன் காரணமாக உடலில் பலவீனம் ஏற்படாது.
எனினும், பீட்ரூட்டை அதிக அளவில் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.
நன்மைகள்?
- உணவு உண்ணும் முன் இதை உட்கொள்வதன் மூலம், சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், சர்க்கரையின் குறைபாடும் நீங்கும். இது உணவை ஜீரணிக்கும் ஆற்றலை தந்து, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது.
- நீரிழிவு நோயால், பலருக்கு உயர் ரத்த அழுத்தம், பலவீனம், சிறுநீரக கோளாறு போன்ற நோய்கள் வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில் பீட்ரூட் சாப்பிடுவது நன்மை பயக்கும். இதனை உட்கொள்வதால் சர்க்கரை நோயினால் ஏற்படும் மற்ற நோய்களில் இருந்து விடுபடலாம்.
- உணவு உட்கொள்வதற்கு முன் இதை சாப்பிட்டால் பலன் கிடைக்கும். ஏனெனில் இது இரத்தத்தில் எளிதில் கரையும். உடல் ஆற்றலும் இதனால் அதிகரிக்கிறது.