நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 100 ரூபாய் உயர்த்தி. 2060 ரூபாயாக நிர்ணயிப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,
உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு வரை இருக்கும் வகையில், 14 வகை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2022-2023 வருடத்தில் முதல் தர நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ஆயிரத்து 1960 ரூபாயிலிருந்து 2060 ரூபாயாக உயர்த்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சாதாரண நெல்லுக்கு 1940 ரூபாயிலிருந்து 2040 ரூபாயாக உயர்த்தி உள்ளதாக அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்தார்.