நெல் குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.2040ஆக அதிகரிப்பு! மத்தியஅமைச்சரவை முடிவு…

டெல்லி: நெல் குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.2040ஆக அதிகரிப்பு செய்து மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளதாக மத்திய இணைஅமைச்சர் அனுராக்தாக்கூர் தெரிவித்து உள்ளார்.

 

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனுராக் தாக்கூர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் காரீஃப் சந்தைப்படுத்தல் சீசனுக்கான MSPகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. நெல், சோளம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், 2022-23-ம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனால் நெல் குறைந்தபட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.2040ஆக அதிகரிப்பு செய்துள்ளதாகவும் கூறினார்.

இறக்குமதியை சார்ந்திருப்பது குறைந்துள்ளது. விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட விகிதங்கள் குறைந்தபட்சம் 1.5 மடங்கு அளவில் MSP களை நிர்ணயிக்கும் கொள்கைக்கு இணங்க உள்ளன என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.