வெளிநாட்டுப் பந்தயத்துக்குச் சென்றபோது, பயிற்சியாளர் தொல்லை கொடுப்பதாக இந்திய வீராங்கனை புகார் அளித்ததையடுத்து ஸ்லோவேனியாவுக்குச் சென்றுள்ள இந்திய மிதிவண்டிப் பந்தய அணி திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளர் ஆர்.கே.சர்மா தன்னுடன் ஒரே அறையில் தங்கச் சொன்னதாகவும், திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதாகவும் கூறி மிதிவண்டிப் பந்தய வீராங்கனை ஒருவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு மின்னஞ்சலில் புகார் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து அந்த வீராங்கனை உடனடியாக இந்தியா திரும்பினார். இது குறித்து விசாரிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் ஸ்லோவேனியாவில் உள்ள இந்திய மிதிவண்டிப் பந்தய அணியினர், பயிற்சியாளர் என அனைவரும் உடனடியாக நாடு திரும்பும்படி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.