பிரதிஷ்டை தினம்; சபரிமலை நடை திறப்பு| Dinamalar


சபரிமலை: பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. சபரிமலையின் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு முன்னிலையில், மாலை 5:00 மணிக்கு நடை திறந்து தீபம் ஏற்றினார்.

தொடர்நது ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து நிர்மால்ய தரிசனத்துக்கு பின், வழக்கமான பூஜைகள் நடைபெறும். இரவு 7:00 மணிக்கு படிபூஜை, இரவு 9:00 மணிக்கு அத்தாழபூஜைக்கு பின், ஹரிவராசனம் பாடி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இதையடுத்து, ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் 14 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.