பிரித்தானிய இளவரசி டயானாவிடமிருந்த ஒரு கெட்ட பழக்கம், அப்படியே அவரது பேரனான குட்டி இளவரசர் ஜோர்ஜிடமும் காணப்படுகிறது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பவள விழா கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது.
அப்போது அரச குடும்பத்தினர் பக்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் வந்து நின்று மக்கள் முன்னர் தோன்றினார்கள்.
அந்த சமயத்தில் இளவரசர் வில்லியம் – கேட் தம்பதியின் மூத்த மகனான 8 வயது குட்டி இளவரசர் ஜோர்ஜின் புகைப்படம் வைரலானது.
இதற்கு முக்கிய காரணம் அவர் நகத்தை கடித்து கொண்டிருந்தது தான்.
ஜோர்ஜ் தன் நகத்தைக் கடித்துக்கொண்டிருப்பதைக் கவனித்துவிட்ட பிரித்தானிய மக்கள், அந்த பழக்கம் அவருக்கு மரபு ரீதியாக வந்திருப்பதாக கருதுகிறார்கள்.
CHRIS JACKSON/GETTY IMAGES
பொதுவாகவே நகத்தை கடிப்பது என்பது ஒரு கெட்ட பழக்கமாகவே பார்க்கப்படுகிறது.
இதே பழக்கத்தை ஜோர்ஜின் பாட்டியும், வில்லியமின் தாயுமான இளவரசி டயானாவும் கொண்டிருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம், இது தொடர்பான ஆதார புகைப்படமும் உள்ளன. கடந்த 1982ல் கர்ப்பிணியாக இருந்த டயானா தனது நகத்தை கடிப்பது போன்ற புகைப்படம் உள்ளது.
அதே நேரம் பின்னாளில் இந்த பழக்கத்தை டயானா விட்டுள்ளார்.
இந்த தகவலை டயானவுக்கு நெருக்கமானவராக இருந்த சிகை அலங்கார நிபுணர் சாம் மெக்நைட் கூறியுள்ளார்.
இருப்பினும், டயானா எப்படி அந்த பழக்கத்தை நிறுத்தினார் என்பது பற்றி ஒருபோதும் பகிரங்கமாக பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ANWAR HUSSEIN/GETTY IMAGES