சமஸ்டிபூர்(பீஹார்): இறந்து போன தங்களது மகன் உடலை வாங்க அரசு மருத்துவமனைக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முடியாததால், வேதனை அடைந்த வயதான தம்பதியினர் லஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை எடுத்த சம்பவம் பீஹாரில் நடந்தது.
பீஹார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஷ் தாக்குர், இவரது மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சதார் அரசு மருத்துவமனையில் தனது மகனின் உடல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி உடலை வாங்க மகேஷ் தாக்குர், தனது மனைவியுடன் அரசு மருத்துவமனை சென்றார்.
ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் உடலை தர வேண்டுமானால் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளது பணம் இல்லையென்பதால், தெருதெருவதாக பிச்சை எடுத்தனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வரைலாக பரவியது. இது குறித்து மருத்துவமனை உயரதிகாரி கூறுகையில், விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பானர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சமஸ்டிபூர்(பீஹார்): இறந்து போன தங்களது மகன் உடலை வாங்க அரசு மருத்துவமனைக்கு ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முடியாததால், வேதனை அடைந்த வயதான தம்பதியினர் லஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.