மடக்கும் சைக்கிளுக்கு மெட்ரோவில் அனுமதி| Dinamalar

பெங்களூரு : ‘இனி மெட்ரோ ரயிலில், மடக்கும் தன்மையுள்ள சைக்கிள்களை கொண்டு வரலாம். இதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை,’ என பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கை:சைக்கிள் ஒட்டுபவர்களின் கோரிக்கையை ஏற்று, இனி மெட்ரோ ரயில்களில், ‘இரண்டாக மடக்கும்’ சைக்கிள்களை கொண்டு செல்லலாம்.

அதுவும் மற்ற பயணியருக்கு தொந்தரவு ஏற்படாத வகையில், மெட்ரோ ரயிலின் கடைசி பெட்டியில் தான், கொண்டு செல்ல வேண்டும்.இந்த சைக்கிள் 15 கிலோவுக்கு அதிகமாக இருக்க கூடாது. 60 செ.மீ., x 45 செ.மீ., x 25 செ.மீ., பரிமாணத்தில் இருக்க வேண்டும்.அப்போது, தான் சோதனை செய்யப்படும் இயந்திரத்திற்குள் செல்லும். இந்த சைக்கிள்களை எடுத்து செல்ல கட்டணம் செலுத்த தேவையில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.