மைசூரு : மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த உறவினரை, விவசாயி வெட்டி கொலை செய்தார்.மைசூரின் நஞ்சன்கூடு அருகே உள்ள மாட்ரள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தஷெட்டி, 47. இவரது உறவினர் சிவண்ணா, 59. விவசாயிகளான இவர்கள் இருவரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்காவை சிவண்ணாவும், தங்கையை சித்தஷெட்டியும் திருமணம் செய்துள்ளனர்.இந்நிலையில் சித்தஷெட்டிக்கு, தன் மனைவியின் அக்காவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இந்த விஷயம் சிவண்ணாவுக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி இருவரையும் எச்சரித்தார். ஆனாலும் அவர்கள், கள்ளக்காதலை தொடர்ந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிவண்ணாவும், சித்தஷெட்டியும் நேரில் சந்தித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சிவண்ணா, சித்தஷெட்டியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். அரிவாளுடன் நஞ்சன்கூடு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
மைசூரு : மனைவியுடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த உறவினரை, விவசாயி வெட்டி கொலை செய்தார்.மைசூரின் நஞ்சன்கூடு அருகே உள்ள மாட்ரள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தஷெட்டி, 47. இவரது உறவினர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.