புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டங்களுக்கு இலங்கை மின்சார சபை ஆதரவளிக்காத காரணத்தினால் மின் கட்டணத்தை அதிகரிக்கும் கோரிக்கையை அமைச்சரவைக்கு முன்வைக்கவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பதிலாகஇ மின் உற்பத்தி செலவைக் குறைக்கஇ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை இலங்கை மின்சார சபை தொடர வேண்டும் என்று அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும்இ இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பளம் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை 25 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கூட்டு ஒப்பந்தம் ஒன்று காணப்படுகின்றது.
அத்துடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அல்லது மின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் மின் உற்பத்திகாகாக செலவிடப்படும் செலவுகள் நுகர்வோர் மீது சுமத்தப்படுகின்றது.
இந்த நிலை மாற்றப்பட வேண்டும். அதற்கான நேரம் இதுவாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.