பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்ட கூற்று தொடர்பான பாராளுமன்ற விவாதம் இரண்டாவது நாளாகவும் இன்று இடம்பெற்றது.
நிதி தொடர்பான முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு காணப்படுவதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். முறையற்ற நிதி முகாமைத்துவம் தற்போதைய நிதி நெருக்கடிக்கான காரணமாகும். இதனால், அரச செலவினத்தைக் குறைத்து, அரச வருமானத்தை மேம்படுத்துவது அவசியமாகும் என அவர் கூறினார். அரசியல் ரீதியான நிகழ்ச்சி நிரலிலிருந்து விலகிச் செயல்படுவது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து கடன் அடிப்படையில், எரிபொருளை பெற்றுக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். திருடர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முறைசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் நெருக்கடிகளை தீர்ப்பது அவசியம் என விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
அதிக வட்டியுடன் கூடிய கடன்கள் பெற்றுக் கொள்ளப்பட்டமை தற்போதைய நெருக்கடிக்கான காரணமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பார்க்கிர் மார்க்கார் தெரிவித்தார்.