கிழக்கு ஈரானில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 10 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.
பாலைவன நகரமான தபாஸ் மற்றும் யாஸ்ட் நகரத்தை இணைக்கும் தடத்தில் அதிகாலையில் ரயில் சென்றுக் கொண்டிருந்த போது, ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ்களில் வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தரம் புரண்ட ரயில் பெட்டி பொக்லைன் இயந்திரத்தின் மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன