இந்தியா மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ள பணவீக்கம் உயர்வுக்கு ரஷ்யா – உக்ரைன் போர் தான் காரணம் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. மீண்டும் வட்டியை அதிகரித்த ரிசர்வ் வங்கி!
ரஷ்யா – உக்ரைன் போர்
கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த இந்தியாவுக்கும், உலக நாடுகளும் ரஷ்யா – உக்ரைன் போர் மூலம் சப்ளை செயின் மற்றும் எரிபொருள் விலை விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனையும், பற்றாக்குறை உலகம் முழுவதும் பணவீக்கம் உயர முக்கிய காரணமாக அமைந்தது.
உணவு பொருட்கள் பற்றாக்குறை
உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரிக்க அடிப்படையான அமைந்தது உணவு பொருட்கள் பற்றாக்குறையும், எரிபொருள் விலை உயர்வு தான். உலகில் பெரும்பாலான நாடுகளில் உணவு பணவீக்கம் பல ஆண்டுள் உச்சத்தை தொட்டு உள்ளது.
இந்தியாவின் பணவீக்கம்
இந்நிலையில் 2022-23ஆம் நிதியாண்டுக்காண பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் என இன்றைய நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். பணவீக்கம் தொடர்த்து கட்டுக்குள் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் சக்திகாந்த தாஸ் கூறினார்.
ஆர்பிஐ மறுமதிப்பீடு
2022-23ஆம் நிதியாண்டுக்கான சில்லறை பணவீக்கம் கணிப்புகளை ஆர்பிஐ மறுமதிப்பீடு செய்துள்ளது.
ஜூன் காலாண்டு – 7.5%
செப்டம்பர் காலாண்டு – 7.4%
டிசம்பர் காலாண்டு – 6.2%
மார்ச் காலாண்டு – 5.8%
3 காலாண்டு
2023ஆம் நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளுக்கு இந்தியாவின் பணவீக்கம் ஆர்பிஐ-யின் அதிகப்படியான பணவீக்க அளவான 6 சதவீதத்திற்கு அதிகமாகவே இருக்கும். ஜூன் 3ஆம் தேதி இந்தியாவின் அன்னிய செலாவணி 601.1 பில்லியன் டாலராக இருந்தது என ஆர்பிஐ கவர்னர் சக்கிகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைத் தடுக்க முடியும்.
War has led to globalisation of inflation, says RBI Governor Shaktikanta Das
War has led to globalisation of inflation, says RBI Governor Shaktikanta Das ரஷ்யா-உக்ரைன் போர் நடக்குதுல்ல.. அதனால்தான் விலைவாசி ஏறிப்போச்சி.. ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்