ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு.. யுபிஐ- கிரெடிட் கார்டு பயனர்களுக்கு குட் நியூஸ்!

இன்று சர்வதேச நாடுகளில் பொருளாதாரத்தினை பதம் பார்க்க தொடங்கியுள்ள பணவீக்கத்தினை கட்டுப்படுத்த, மத்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ள பொருளாதாரமானது, ரஷ்யா உக்ரைன் பிரச்சனையால் சரிவினைக் கண்டு வந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நடந்த மத்திய வங்கி கூட்டத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தினை ஆர்பிஐ அதிகரித்துள்ளது. இது மட்டும் அல்ல, இன்னும் பல அறிவிப்புகளையும் கொடுத்துள்ளது.

ரெப்போ விகித உயர்வு.. பங்குச்சந்தையில் ஆச்சரிய மாற்றம்..!

யுபிஐ - கிரெடிட் கார்டு இணைப்பு

யுபிஐ – கிரெடிட் கார்டு இணைப்பு

குறிப்பாக யுபிஐ பயனர்களுக்கு பயனளிக்கும் விதமாக, யுபிஐ தளத்துடன் கிரெடிட் கார்டுகளையும் இணைத்துக் கொள்ள அனுமதித்துள்ளது, இதன் மூலம் யுபிஐ பயனர்கள் ரூபே கிரெடிட் கார்டுகளில் இருந்து, யுபிஐ மூலம் பணம் செலுத்திக் கொள்ள முடியும். இதனை இன்று நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

இந்தியாவில் பிரபலமான சேவை

இந்தியாவில் பிரபலமான சேவை

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் மிக பிரபலமான பண பரிமாற்ற முறைகளில் ஒன்றாக இருக்கும் யுபிஐ சேவையில், தற்போது கிரெடிட் கார்டையும் இணைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் 26 கோடிக்கும் அதிகமாக தனிப்பட்ட பயனர்களும், 5 கோடி வணிகர்களும் இணைந்துள்ளனர். மே 2022ல் மட்டும் 594.63 கோடி பரிவர்த்தனை மூலம், 10.40 லட்சம் கோடி மதிப்பிலான தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை
 

டெபிட் கார்டு மூலம் பரிவர்த்தனை

இந்த யுபிஐ சேவைகள் நடப்பு கணக்கும், சேமிப்பு கணக்கு மூலம் இணைப்பதன் மூலம் (டெபிட் கார்டு வழியாக) எளிதில் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஆக இந்த நிலையில் தற்போது கிரெடிட் கார்டு மூலமும் பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூபே கிரெடிட் கார்டு மூலமாக பரிவர்த்தனை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் எளிதில் பரிவர்த்தனை செய்ய பயனுள்ளதாக அமையலாம்.

பயனுள்ள திட்டம்

பயனுள்ள திட்டம்

இதற்கு தேவையான நடைமுறைகள் முடிந்த பின் இந்த சேவையை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ-யின் இந்த அறிவிப்பினால் ஒருவருடைய கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டினை யுபிஐ- உடன் இணைப்பதன் மூலம், அவர்கள் கார்டினை ஸ்வைப் செய்யாமல், QR கோடினை ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்திக் கொள்ளலாம். இதற்காக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். ஆக இது பாதுகாப்பானதாகவும் உள்ளது.

கூகுள் பேவில் என்னென்ன இணைக்கலாம்?

கூகுள் பேவில் என்னென்ன இணைக்கலாம்?

நீங்கள் யுபிஐ-யில் கிரெடிட் கார்டினையோ அல்லது டெபிட் கார்டினையோ இணைத்திருத்தல் வேண்டும். கூகுள் பே தளத்தின் படி ஒரு தனி நபர் ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ கார்டுகள், கோடக் வங்கி, ஹெச் டி எஃப் சி வங்கி, இந்தஸ் இந்த் வங்கி, ஃபெடரல் வங்கி, ஆர்பிஎல் வங்கி, ஹெச் எஸ் பி சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஒன் கார்டுகளை சேர்த்துக் கொள்ளலாம். இவை விசா மற்றும் கேட்வேக்களில் இயக்கப்பட வேண்டும்.

கூகுள் பேவில் எப்படி இணைப்பது?

கூகுள் பேவில் எப்படி இணைப்பது?

படி 1: உங்களது கூகுள் பே ஆப்பினை ஓபன் செய்து, அதில் புரஃபைல் பிக்சரை கிளிக் செய்யவும்.

படி 2; பேமெண்ட் முறையை கிளிக் செய்யவும். அதில் ஏற்கனவே உள்ள வங்கி கணக்குகளை பார்க்கலாம். அதில் கணக்குகளை சேர்க்க அல்லது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை இணைக்க என்பதை கிளிக் செய்யவும்.

படி 3: இதற்காக உங்களுக்கு உங்களது கார்டு எண், எக்ஸ்பெய்ரி எண், சிவிவி எண், கார்டு உரிமையாளரின் பெயர், முகவரி என அனைத்தும் கொடுக்க வேண்டியிருக்கும்.

படி 4: இதனை எல்லாம் பதிவு செய்த பிறகு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்க வேண்டும். அதன் பிறகு நீங்காள் கடைகளிலும், தேவையான இடங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi ஆர்பிஐ

English summary

RBI proposes to link credit cards to UPI: check details here

Reserve Bank of india allowed credit cards to be linked to the UPI site. This will enable UPI users to make payments through Credit Cards.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.