பெட்ரோல் டீசல் விலை குறைப்பிற்குப் பின்பு இந்தியாவில் உற்பத்தி, வர்த்தகம் என அனைத்தும் மேம்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் மக்கள் தினமும் பயன்படுத்தும் உணவு பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஆனால் பணவீக்கம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை இன்னும் சரியாகவில்லை.
இந்தப் பிரச்சனையைச் சரி செய்ய ரிசர்வ் வங்கி இன்று ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதோடு யூபிஐ மற்றும் ஆட்டோ பேமெண்ட்ஸ் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவ்விரு அறிவிப்புகளும் சாமானிய மக்களுக்குப் பெரிய அளவில் பயன்படும்.
ஆர்பிஐ வட்டி உயர்வால் பாண்ட் & மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பா?
யூபிஐ
இந்திய டிஜிட்டல் பேமெண்ட் சேவை சந்தையை முற்றிலும் தலைகீழாக மாற்றியுள்ள யூபிஐ சேவை மூலம் தற்போது வங்க கடனுக்குடன் இணைக்கப்பட்ட பணப் பரிமாற்றம் மற்றும் பில் பேமெண்ட்களைச் செய்து வருகிறோம்.
ஆனால் இந்த அடிப்படை சேவைகளை வங்கி கணக்கில் பணம் இல்லையெனில் செய்ய முடியாது.
கிரெடிட் கார்டு
இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவும், கிரெடிட் கார்டு பயன்பாட்டை டிஜிட்டல் பேமெண்ட் சேவையில் அதிகரிக்கும் வகையில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் யூபிஐ தளத்தில் கிரெடிட் கார்டு இணைக்கும் திட்டத்தைப் பரிந்துரை செய்துள்ளது.
யூபிஐ வாடிக்கையாளர்
இதன் மூலம் கிரெடிட் கார்டு வைத்துள்ள யூபிஐ வாடிக்கையாளர் அனைவரும் கிரெடிட் கார்டு வைத்துப் பில்களைச் செலுத்த முடியும். இந்த அறிவிப்பு டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில் மிகப் பெரிய கதவுகளைத் திறந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆட்டோ பேமெண்ட்
இதைத் தொடர்ந்து இந்திய பேமெண்ட் சந்தையில் ஆட்டோ பேமெண்ட் எவ்வளவு முக்கியம் என்பது வங்கிகளும், நிறுவனங்களுக்கும் தான் தெரியும். இதேபோல் ஒவ்வொரு மாதமும், காலாண்டும் பல சேவைகளுக்குப் பேமெண்ட் செய்யத் தவறினால் அதிகப்படியான அபராதம் இருக்கும் அதைத் தவிர்க்க சாமானிய மக்களுக்கு ஆட்டோ பேமெண்ட் பயன்படும்.
5000 ரூபாய் வரை
இதுவரை 5000 ரூபாய் வரையில் ஆட்டோ பேமெண்ட்-க்கு OTP தேவையும், வாடிக்கையாளர் ஒப்புதலும் தேவையில்லாமல் இருந்தது. இது இன்சூரன்ஸ் ப்ரீமியம், கல்வி கட்டணம் எனப் பல பெரிய பண மதிப்புக் கொண்ட பேமெண்ட்களைச் செய்ய முடியாமல் இருந்தது. இந்த அளவீட்டை உயர்த்த ஆர்பிஐ-க்கு அடுத்தடுத்து பல தரப்புகள் கோரிக்கை வைத்தது.
ஓடிபி இல்லாமல் 15,000 ரூபாய் வரை
இதைத் தொடர்ந்து ஓடிபி இல்லாமல் 15,000 ரூபாய் வரையில் ஆட்டோ பேமெண்ட் மேற்கொள்ளும் தளர்வுகளை அமலாக்கம் செய்யப்பட்ட உள்ளதாக அறிவித்துள்ளார் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ். பல டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் இந்த ஆட்டோ பேமெண்ட் வைத்து தான் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்து வருகிறது.
RBI’s 2 big announcement; No OTP needed for e-mandates, Credit cards in UPI
RBI’s 2 most important announcement; No OTP needed for e-mandates, Credit cards in UPI ரூ.15000 வரை ஆட்டோ பேமெண்ட்.. இனி ஒடிபி தொல்லை இல்லை.. ஆர்பிஐ செம அறிவிப்பு..!