உக்ரைன் ரஷ்யா போருக்கு பின்பு ரஷ்யாவில் இருந்து பல நிறுவனங்கள் அடுத்தடுத்து வெளியேறியது, இதனாஸ் ரஷ்யா பல துறையில் அதிகப்படியான வர்த்தகத்தை இழந்தது மட்டும் அல்லாமல் ரஷ்ய நாட்டினர் அடுத்தடுத்து வேலைவாய்ப்பை இழந்தனர்.
இதனால் விளாடிமீர் புடின் தலைமையிலான அரசே நேரடியாக களத்தில் இறங்கி ரஷ்யாவை விட்டு வெளியேறும் நிறுவனத்தை கைப்பற்றி அந்நாட்டு தொழிலதிபர்களுக்கு ஒப்படைத்து வந்தது. இது ரஷ்யாவில் நடக்கும் வரையில் சரி, இதுவே வெளிநாட்டில் வர்த்தகம் செய்து வரும் ரஷ்யர்களுக்கு நடந்தால்…
இப்படிப்பட்ட சம்பவம் தான் இங்கிலாந்தில் நடந்துள்ளது, ரோமன் அப்ரமோவிச் என்பவர் 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடைய நிறுவனத்தை வெறும் 1 டாலருக்கு விற்பனை செய்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் நடக்குதுல்ல.. அதனால்தான் விலைவாசி ஏறிப்போச்சி.. ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் ரஷ்யா மீதும் ரஷ்ய பணக்காரர்கள், ரஷ்ய அரசியல் தலைவர்கள் மீதும் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியில் வெளிநாட்டில் இருக்கும் ரஷ்ய அரசின் பணம், தங்கம், முதலீடுகள், ரஷ்ய பணக்காரர்களின் கப்பல், வீடுகள் தத்தம் அரசு கைப்பற்றி வந்தது.
வெறும் 1 டாலர்
இதனால் ரஷ்ய பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் அதிகளவிலான சொத்துகளை இழந்து வந்தனர் இதன் வரிசையில் தான் பிரிட்டன் நாட்டின் ரோமன் அப்ரமோவிச் வைத்திருந்த டெலிகாம் நிறுவனத்தை வெறும் 1 டாலருக்கு விற்பனை செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.
Truphone நிறுவனம்
பிரிட்டன் நாட்டில் இயங்கி வரும் Truphone என்னும் நிறுவனம் 2020ல் 512 மில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டது. இந்நிறுவனத்தில் ரோமன் அப்ரமோவிச் மற்றும் அவரது வர்த்தக பார்ட்னர் ஆன அலெக்சாண்டர் அப்ரமோவ் மற்றும் அலெக்சாண்டர் ஃப்ரோலோவ் சுமார் 375 மில்லியன் டாலர் முதலீடு செய்தனர்.
Roman Abramovich யார் இவர்
ரோமன் அப்ரமோவிச் ரஷ்யாவின் மிகவும் சக்தி வாய்ந்த தொழிலதிபர் மற்றும் அரசியல் தலைவர் ஆவார். சமீபத்தில் Roman Abramovich-க்கு சொந்தமான இரு தனியார் விமானங்களை கைப்பற்ற அமெரிக்கா ஒப்புதல் அளித்தது. மேலும் ரஷ்யாவின் மிகவும் சக்திவாய்ந்த oligarch ஆவார்.
23 சதவீத பங்குகள்
Truphone நிறுவனத்தில் ரோமன் அப்ரமோவிச் சுமார் 23 சதவீத பங்குகளை வைத்துள்ளார். தற்போது இந்த நிறுவனத்தை தான் வெறும் 1 டாலருக்கு விற்பனை செய்துவிட்டு வெளியேறியுள்ளார். Truphone நிறுவனத்தை கைப்பற்றியது Hakan Koc, இவரின் பழைய கார்களை விற்பனை செய்யும் Auto1 என்னும் நிறுவனத்தில் அலெக்சாண்டர் ஃப்ரோலோவ் மகனின் நிறுவனம் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hakan Koc கைப்பற்றினார்
இந்நிலையில் தற்போது Truphone நிறுவனத்தின் 90 சதவீத பங்குகளை Hakan Koc-ம், 10 சதவீத பங்குகளை Pyrros Koussios என்ற தனியார் பங்கு முதலீட்டாளர் கைப்பற்றியுள்ளார்.
Chelsea FC விற்பனை
Chelsea FC-யை ரோமன் அப்ரமோவிச் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. LA டோட்ஜர்ஸ் இணை உரிமையாளர் டோட் போஹ்லி மற்றும் முதலீட்டு நிறுவனமான கிளியர்லேக் தலைமையிலான குழுவிற்கு 5.3 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டது.
Russian oligarch Roman Abramovich sold truphone for just $1, Lost 512 million dollars
Russian oligarch Roman Abramovich sold truphone for just $1, Lost 512 million dollars ரூ.4000 கோடி அம்பேல்.. வெறும் ரூ.77-க்கு கம்பெனியை விற்ற ரோமன் அப்ரமோவிச்..! யார் இவர் தெரியுமா..?