ரெபோ வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது ரிசர்வ் வங்கி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: ரெபோ வட்டி விகிதத்தை (வங்கி கடனுக்கான வட்டி விகிதம்) 0.5 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 5 வாரங்களில், 2வது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

பணவீக்கத்தை உயர்த்துவதற்கான முடிவு, மும்பையில் ரிசர்வ் வங்கியில் கடந்த 3 நாட்களாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஒரு மனதாக எடுக்கப்பட்டது. தற்போது, ரெபோ வட்டி விகிதம் 0.5 சதவீதம் அதிகரித்து 4.9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

latest tamil news

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.