ரெப்போ அதிகரிப்பால் கடனுக்கான வட்டி அதிகரிக்கும்தான்! ஆனா, ஃபிக்சட் டெபாசிட்தாரர்களுக்கு குட் நியூஸ்

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் 50 புள்ளிகள் உயர்த்தி 4.40%-ல் இருந்து 4.90%ஆக நிர்ணயம் செய்துள்ளது. இதனால் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி மேலும் உயர வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் இந்த ரெப்போ வட்டி விகித உயர்வால் பிக்சட் டெபாசிட்தாரர்களுக்கு வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது.

பிக்ஸட் டெபாசிட் என்றாலே மிக குறைந்த வட்டி விகிதம் என்பதால் அதில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயங்கி இருந்த நிலையில் ரெப்போ வட்டி விகித உயர்வு காரணமாக இனி அதிக அளவில் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கலாம்.. மீண்டும் வட்டியை அதிகரித்த ரிசர்வ் வங்கி!

ரெப்போ

ரெப்போ

ரிசர்வ் வங்கி இன்று நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 0.50% உயர்த்தியதால், 36 நாட்களுக்குள் ரெப்போ விகிதம் 0.9% ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 2014 இல் SBI வழங்கிய அதிகபட்ச வட்டி விகிதமான 9% இலிருந்து மே 2020க்குள் 5.4% ஆக FD வட்டி விகிதத்தில் 40% சரிவைக் கண்டது. இந்த நிலையில் FD முதலீட்டாளர்களுக்கு தற்போது நல்ல காலம் வந்துவிட்டதாக கருதப்படுகிறது.

FD வட்டி விகிதம்

FD வட்டி விகிதம்

செப்டம்பர் 2014 இல் SBI வழங்கும் அதிகபட்ச வட்டி விகிதமான 9% இலிருந்து 6 வருட காலத்திற்குள் மே 2020 இல் 5.4% வரை பத்தாண்டு குறைந்த FD வட்டி விகிதம் காரணமாக FDல் முதலீடு செய்ய பொதுமக்கள் தயங்கி வந்தனர்.

கூடுதல் வட்டி
 

கூடுதல் வட்டி

இந்த நிலையில் ரெப்போ விகிதத்தின் இரண்டு தொடர்ச்சியான உயர்வுகள் நிச்சயமாக அதிக விகிதங்களை நோக்கி FD இனி செல்லும். FD வட்டி விகிதத்தை 5.5% இலிருந்து 6.4% ஆக 90 அடிப்படை புள்ளிகள் உயர்த்தினால், 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு 1 லட்சம் ரூபாய் FDக்கும் ரூ. 5,958 கூடுதல் வட்டி கிடைக்கும்.

தாமதம்

தாமதம்

ரெப்போ வட்டி விகிதங்கள் உயரத் தொடங்கும் போதெல்லாம் கடன் விகிதங்கள் விரைவாக பரிமாற்றத்தைக் காணும் என்பதும், அதே வேளையில் FD வட்டி விகிதங்களில் விகித பரிமாற்றம் மெதுவாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. வட்டி விகித உயர்வின் பலனை வங்கிகள் டெபாசிட் செய்பவர்களுக்கு வழங்குவது தாமதமாகவே நடைபெறுகிறது. வங்கிகள் ஏற்கனவே போதுமான பணப்புழக்கத்தைக் கொண்டிருப்பதால் டெபாசிட்டுக்கான போட்டி மிக அதிகமாக இல்லை என்பதும் டெபாசிட் விகிதத்தில் தாமதமான பரிமாற்றத்திற்கான மற்றொரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இருப்பினும், ரிசர்வ் வங்கி படிப்படியாக ரெப்போ வட்டி விகிதங்களை உயர்த்தினால், வங்கிகள் தங்கள் வைப்பு வட்டி விகிதங்களையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே FD முதலீட்டாளர்கள் இதை மனதில் வைத்துக்கொண்டு FD-இல் டெபாசிட் செய்து முழுப் பலனையும் பெறலாம்.

திண்டாட்டம்

திண்டாட்டம்

வட்டி விகித உயர்வு என்பது டெபாசிட் செய்பவர்களுக்கு வரவேற்கத்தக்க செய்தியாக இருந்தாலும் வங்கிகளில் லோன் வாங்கியவர்களுக்கு இனி திண்டாட்டம் தான். ஏற்கனவே கடனை கட்ட முடியாமல் பல நிறுவனங்கள் தவித்து வரும் நிலையில் இந்த வட்டி விகிதம் கூடுதல் சுமையாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI’s move to push up FD rates further: Here’s how investors can get the best of it

RBI’s move to push up FD rates further: Here’s how investors can get the best of it | ரெப்போ வட்டி விகித அதிகரிப்பு: பிக்சட் டெபாசிட்தாரர்களுக்கு குட் நியூஸ்

Story first published: Wednesday, June 8, 2022, 11:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.