ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் அதிகரித்து 4.90% ஆக உயர்வு – ஆர்பிஐ

இந்தியாவின் பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பை மேம்படுத்தவும், பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் இந்திய ரிசர்வ் வங்கி மே மாதம் திடீரென அறிவித்த வட்டி விகித உயர்வு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

இதேபோல் ஜூன் 6 ஆம் தேதி துவங்கப்பட்ட இரு நாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை இன்று ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட உள்ளார்.

ஏற்கனவே சக்திகாந்த தாஸ் அடுத்த இரு நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி உயர்வு கட்டாயம் இருக்கும் என பேட்டிக் கொடுத்துள்ளார். இதனால் சந்தையில் இந்த நாணய கொள்கை கூட்டத்திற்கு எதிர்பார்ப்பு பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

தங்க பத்திரத்தை முன்கூட்டியே எடுக்க போறீங்களா? ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் அதிகரித்து 4.90% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் ரெப்போ விகிதம் இன்னும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டிலேயே உள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

வங்கி விகிதம்

வங்கி விகிதம்

இன்றைய அறிவிப்பு மூலம் வங்கி விகிதம் 5.15 சதவீதமாக உயர்ந்துள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க உள்ளது.

ஜிடிபி
 

ஜிடிபி

நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் NSO கணிப்பின் படி 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.7% ஆக உயரும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதேடு ரியல் ஜிடிபி வளர்ச்சி 2023ஆம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் எனவும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம்

பணவீக்கம்

2023ஆம் நிதியாண்டுக்காண இந்தியாவின் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதில் முதல் 2 காலாண்டில் 7 சதவீத்திற்கும் அதிகமாகவும், அடுத்த இரண்டு காலாண்டில் படிப்படியாக குறைந்து சில்லறை பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

 ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த் தாஸ்

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த் தாஸ்

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த் தாஸ் ஏற்கனவே வட்டி விகிதம் உயர்வு கட்டாயம் இருக்கும் என அறிவித்துள்ள வேளையில் இந்த நாணய கொள்கை கூட்டத்தில் 0.40 சதவீதம் உயர்த்திவிட்டு, ஆகஸ்ட் கூட்டத்தில் 0.35 சதவீதம் வரையில் உயர்த்தலாம் அல்லது அடுத்த வார கூட்டத்தில் 0.50 சதவீதமும் ஆகஸ்ட் கூட்டத்தில் 0.25 சதவீதமும் உயர்த்தப்படலாம் என சந்தை கணிப்புகள் கூறுகிறது.

வட்டி விகிதம் உயர்வு

வட்டி விகிதம் உயர்வு

ஆகஸ்ட் 2018க்கு பின்பு முதல் முறையாக ரெப்போ விகிதத்தை மே மாதம் ஆர்பிஐ அதிகரித்தது. இந்தியாவின் பணவீக்க பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தி 4.40% ஆகவும், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான சிஆர்ஆர் விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதன் மூலம் 4.5 சதவீதமாக உயர்த்தியது.

நாணய கொள்கை கூட்டம்

நாணய கொள்கை கூட்டம்

இதன் மூலம் அடுத்த இரண்டு நாணய கொள்கை கூட்டத்தில் அறிவிக்கப்படும் வட்டி உயர்வு கொரோனாவுக்கு முன்பு இருந்த வட்டி விகிதத்தை நடைமுறைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக கொரோனா லாக்டவுன் காலத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும் நீக்கப்பட உள்ளது.

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம்

ரெப்போ விகிதம் தொடர்ந்து அதிகரிப்பது மூலம் மக்கள் வாங்கிய வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன், தங்க நகைக்கடன் என அனைத்தின் மீதான வட்டி விகிதம் உயரும். இது விலைவாசி உயர்வால் ஏற்கனவே அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ள நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும்.

 CRR விகிதம்

CRR விகிதம்

மேலும் ஆர்பிஐ இன்றைய நாணய கொள்கை முடிவுகளில் வங்கிகளுக்கான CRR விகிதத்தை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இதனால் வங்கிகளின் பண இருப்பு குறைந்து அதன் வர்த்தக சுதந்திரம் கணிசமாக குறையும்.

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் 11 – 11.30 மணியளவில் அறிவிப்பார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI MPC meet: Repo rate hiked by 50 BPS to 4.90 percent

RBI MPC meet: Does Repo rate and CRR rate will be hiked again

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.