இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதும் 4.40 சதவீதத்திலிருந்து 4.90% என 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டது என்பதையும் பார்த்தோம்.
பொதுவாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும் போதெல்லாம் பங்கு சந்தை வீழ்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட அறிவிப்பால் பங்கு சந்தை சுமார் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரெப்போ அதிகரிப்பால் கடனுக்கான வட்டி அதிகரிக்கும்தான்! ஆனா, ஃபிக்சட் டெபாசிட்தாரர்களுக்கு குட் நியூஸ்
ரெப்போ
ஆனால் அதே நேரத்தில் இன்று ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்ட அறிவிப்பு வெளியானதிலிருந்து பங்குச் சந்தை சரிவில் இருந்து முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பங்குச்சந்தை
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியபோது சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்து 54,755 என்ற நிலையில் வர்த்தகமானது. இந்த நிலையில் ரெப்போ வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்து திடீரென பங்குச்சந்தை தலைகீழாக மாறி தற்போது சுமார் சுமார் 150 புள்ளிகள் உயர்ந்து 55,250 என்ற நிலையிலும், நிப்டி சுமார் 50 புள்ளிகள் உயர்ந்து 16,454 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.
பேங்க் நிஃப்டி
ரெப்போ வட்டி விகித உயர்வு காரணமாக பேங்க் நிஃப்டி மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது. சற்றுமுன் பேங்க் நிப்டி சுமார் 350 புள்ளிகள் வரை உயர்ந்து 35,350 என வர்த்தகமாகி வருகிறது.
வீட்டுக்கடன்
ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தாலும், வீட்டுக்கடன் குறித்த நல்ல செய்தியை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வீட்டுவசதி திட்டத்திற்கான நிதியை நீடிக்க கிராமப்புற கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக நிப்ட் மற்றும் சென்செக்ஸ் உயர்ந்துள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜிடிபி
2022-23 நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில் பணவிக்கம் என்பது 6.7 சதவீதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அவர்கள் பணவீக்கம் குறித்து கூறியபோது, ‘பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் பணவீக்கத்தை இன்னும் கட்டுக்குள் கொண்டுவர வாய்ப்பு உள்ளது என்றார்.
After repo rate hiked news, Sensex gain around 150 points
After repo rate hiked news, Sensex gain around 200 points | ரெப்போ வட்டி விகித அதிகரிப்பு: பங்குச்சந்தையின் தாக்கம் என்ன?