லண்டன் நகரம் ஸ்தம்பிக்கும்: களமிறங்கும் மேலும் பல தொழிற்சங்கங்கள்


எதிர்வரும் ஜூன் 21ம் திகதி லண்டன் மக்கள் எங்கும் செல்ல முடியாதபடி நகரம் ஸ்தபிக்கும் என்றே தெரிய வருகிறது.

நூற்றுக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் ஜூன் 21ம் திகதி முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனுக்கான Unite போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் லண்டன் சுரங்க ரயில் சேவை ஊழியர்களும் ஜூன் 21ம் திகதி முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.

லண்டன் நகரம் ஸ்தம்பிக்கும்: களமிறங்கும் மேலும் பல தொழிற்சங்கங்கள்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட Unite ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பில் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஜூன் 22ம் திகதியும் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
1989கு பின்னர் பிரித்தானியா எதிர்கொள்ளவிருக்கும் மிகப்பெரிய வேலை நிறுத்தம் இதுவென தெரிவித்துள்ளனர்.

RMT உறுப்பினர்கள் மற்றும் 13 ரயில் சேவைகள் எதிர்வரும் 21, 23 மற்றும் 25ம் திகதிகளில் மிகப்பெரிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

லண்டன் நகரம் ஸ்தம்பிக்கும்: களமிறங்கும் மேலும் பல தொழிற்சங்கங்கள்

மொத்தம் 40,000 உறுப்பினர்கள் தொடர்புடைய மூன்று நாள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளித்துள்ளனர்.

இதனிடையே, வேலை உறுதி மற்றும் ஓய்வூதியம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் இந்த 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தம் பயணிகளுக்கு மேலதிக குழப்பத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது.

லண்டன் நகரம் ஸ்தம்பிக்கும்: களமிறங்கும் மேலும் பல தொழிற்சங்கங்கள்

குறித்த வேலை நிறுத்தத்தில், Chiltern Railways, Cross Country Trains, Greater Anglia, LNER, East Midlands Railway, c2c, Great Western Railway, Northern Trains, Southeastern, South Western Railway, Transpennine Express, Avanti West Coast மற்றும் West Midlands ரயில் சேவைகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.