கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் படம் நூறு கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறது. KGF 2க்கு பிறகு விக்ரம் படத்திற்கு திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
வசூல் மற்றும் விமர்சன ரீதியாக விக்ரம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் நடிகர் கமல் ஹாசன் இயக்குநர் லோகேஷுக்கும், லோகேஷ் கனகராஜ் கமலுக்கும் மாறி மாறி நன்றிகளை கூறி வந்தது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் விக்ரம் வெற்றியை தொடர்ந்து தனது தீவிர ரசிகரும், இயக்குநருமான லோகேஷ் கனகராஜுக்கு ஆடம்பரமான கார் ஒன்றினை பரிசாக அளித்ததோடு, லோகேஷின் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் TVS Apache RTR 160 பைக்கை பரிசளித்திருக்கிறார் கமல்ஹாசன்.
இதனிடையே லோகேஷுக்கு கமல் கொடுத்த LEXUS ES 300h கார் குறித்துதான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருக்கிறது.
அந்த காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை காணலாம்:
டொயோட்டோ நிறுவனத்தின் Luxury பிராண்ட்தான் லெக்சஸ். லோகேஷுக்கு கொடுக்கப்பட்ட இந்த es 300h ரக கார் என்ட்ரி லெவலில் இருக்கும் சொகுசு seden கார். இது Exquisite, Luxury என இரண்டு வகைகளில் இருக்கிறது.
இந்த ரக லெக்சஸ் காரின் குறைந்தபட்ச விலை ரூ.68 லட்சமாகும். லோகேஷுக்கு கமல்ஹாசன் பரிசளித்துள்ள காரின் விலை 75 லட்ச ரூபாய் இருக்கும்.
லெக்சஸ் es 300h-ல் 12.3 இன்ச் கொண்ட டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உள்ளது. இதில் ஆப்பிள், ஆண்ட்ராய்டு OS பயன்படுத்தலாம்.
Hand free power back door: சென்ஸார் மூலம் கைகளை பயன்படுத்தாமலே காரின் பின்பக்க டோரை திறந்து மூடலாம். அதில் 49 இன்ச் கொண்ட வைக்கும் வசதி உள்ளது.
MARK LEVINSON SURROUND SOUND SYSTEM என்ற அம்சத்தின் மூலம் சிறப்பான ஆடியோ தரத்தில் கொடுக்கிறது.
இந்த லெக்சஸ் ஏரோடைனமிக் டிசைனில் Global Architecture-K என்ற கட்டுமானத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
பெரிய விபத்தால் ஏற்படும் சேதத்தை தவிர்க்கும் வகையில் high strength stainless steel கொண்டு கார் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
டிரைவர், பயணிகள் என அனைவருக்கும் எந்த காயமும் ஏற்படாதவாறு 10 ஏர் பேக் உள்ளது.
VSC (Vehicle Stability Control) இந்த அம்சத்தால் ஈரப்பதமான சாலைகளில் வழுக்காமல் அலேக்காக பயணிக்க உதவும்.
இதுபோக சம்மரின் போது முதுகு வியர்க்காமல் இருக்க வெண்டிலேட்டட் இருக்கைகள் உள்ளன.
லெக்சஸ் es 300h ஒரு ஹைபிரிட் கார். அதாவது பெட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் என இரண்டிலும் இது இயங்கும்.
ev mode-ல் ஓட்டுவதற்கு NORMAL, ECO, and SPORT என ட்ரைவ் மோட் உள்ளது.
பிரத்யேகமாக இந்த லெக்சஸில் EMV (Electro Multi-Vision) மோடில் Head-Up Display அம்சம் உள்ளது. அதன் மூலம் , சாலையை விட்டுப் பார்வையை எடுக்காமல் விண்ட்ஷீல்டிலேயே டிஸ்ப்ளே தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
2487 சிசி – 4 சிலிண்டர்களை கொண்ட இந்த லெக்சஸ் பெட்ரோல் எஞ்சினில் பவர் 218 bhp. 204 செல்கள் கொண்ட நிக்கல் ஹைட்ரேடு பேட்டரி இருப்பதால் காரை இயக்குவதற்கான ஸ்டார்டிங் ட்ரபுளே இதில் இருக்காது.
ALSO READ: ‘விக்ரம்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த போதே பற்றி எரிந்த தியேட்டர் ஸ்கிரீன்!