சென்னை: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 8 முதல் 11-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் திருவண்ணாமலை, திருச்சி, பெருங்களூர், தொண்டி, பொன்மலை, ஆம்பூர், அன்னவாசல் பகுதிகளில் தலா 70 மி.மீ மழை பெய்துள்ளது.