வவுனியா மாவட்டத்தில் வெற்றிகரமான வெற்றிலை செய்கை என,தேசிய உணவு உற்பத்தி திட்டம் மற்றும் சேதனபசளை வேலைத்திட்டத்தின் கீழ் பதிவாகியுள்ளது.
வவுனியா களுகுன்னமடுவ பகுதியில் சேதனபசளையை பயன்படுத்தி பயிரிடப்பட்ட வெற்றிலை தோட்டத்தின் மூலம் வெற்றிகரமான அறுவடையை கிடைத்திருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சந்தையில் வெற்றிலைக்கு அதிக கேள்வி நிலவுவதோடு, இரசாயன உரங்களை பயன்படுத்தாது சேதனபசளையை மாத்திரம் பயன்படுத்தியதில் மிகக்குறைந்த செலவில் தாம் அதிக இலாபம் ஈட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி. ஏ. சரத் சந்ர இன்று (08) நேரில் சென்று குறித்த வெற்றிலை தோட்டத்தை பார்வையிட்டதுடன் இவ்வாறான இக்கட்டான காலத்தில் இதுபோன்ற வீட்டுத் தோட்டச் செய்கையில் அனைவரும் ஈடுபடுவது அவசியம் எனவும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.