வாகனங்களின் டயர்கள் மற்றும் உதிரி பாகங்களின் விலை 100 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனத்திற்கான மின்கலங்களின் விலைகளிலும் மிகப்பெரிய அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக வர்த்தக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
டயர்களின் விலை அதிகரிப்பு
ரூ.50,000 ஆக இருந்த பேருந்து டயரின் விலை தற்போது ரூ.75,000 முதல் ரூ.80,000 வரை அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட லொறி டயர் ரூ.21,000 ஆக இருந்தது, தற்போது ரூ.34,000 முதல் ரூ.40,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.9,500க்கு விற்கப்பட்ட டயர்கள் தற்போது ரூ.16,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கார் டயர்களின் விலை கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு டயர் விலை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்ந்துள்ளது.