விவசாய துறை & கெமிக்கல் துறையில் லாபத்தினை அள்ளலாம்.. ஏன்.. நிபுணர்கள் சொல்லும் காரணத்தை பாருங்க!

தொடர்ச்சியாக கடந்த சில காலாண்டுகளாகவே கெமிக்கல் மற்றும் விவசாய துறை சார்ந்த நிறுவனங்கள் வலுவான வருவாயினை பதிவு செய்து வருகின்றன. இது உரங்கள், கெமிக்கல் விலையேற்றம், ஏற்றுமதி வளர்ச்சி, தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் மார்ஜின் விகிதம் மேம்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிறுவனங்கள் தொடர்ந்து வலுவான மார்ஜினை கொண்டுள்ளன. இதற்கிடையில் சில கெமிக்கல் மற்றும் விவசாய துறை பங்குகளை ஷேர்கான் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

கெமிக்கல் பங்குகள்?

ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் – இலக்கு விலை – ரூ.1000 – CMP – 697.90 – 43% ஏற்றம் காணலாம்

அதுல் லிமிடெட் – இலக்கு விலை – ரூ.11,000 – CMP – 8041 – 36% ஏற்றம் காணலாம்

NOCIL – இலக்கு விலை – ரூ.348 – CMP – 264.05 – 31% ஏற்றம் காணலாம்

SRF – இலக்கு விலை – ரூ.2800 – CMP – 2250.40 – 24% ஏற்றம் காணலாம்

சுதர்சன் கெமிக்கல்ஸ் – இலக்கு விலை – ரூ.550 – CMP – 455.60 – 20% ஏற்றம் காணலாம்

வினதி ஆர்கானிக்ஸ் – இலக்கு விலை – ரூ.2450 – CMP – 2019 – 21% ஏற்றம் காணலாம்

விவசாய துறை பங்குகள்
 

விவசாய துறை பங்குகள்

கொரமெண்டல் இண்டர்நேஷனல் – இலக்கு விலை – ரூ.1070 – CMP – 922 – 16% ஏற்றம் காணலாம்

இன்செக்டைசைடஸ் இந்தியா (insecticides india) – இலக்கு விலை – ரூ.900 – CMP – 798.75 – 12% ஏற்றம் காணலாம்

பிஐ இண்டஸ்ட்ரீஸ் – இலக்கு விலை – ரூ.3300 – CMP – 2590.95 – 25% ஏற்றம் காணலாம்

யுபிஎல் – இலக்கு விலை – ரூ.930- CMP – 733 – 26% ஏற்றம் காணலாம்

சுமிடோமோ கெமிக்கல் இந்தியா (summitomo Chemical india) – இலக்கு விலை – ரூ.540 – CMP – 476.20 – 13% ஏற்றம் காணலாம்

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

கெமிக்கல் பங்குகளை பொறுத்தவரையில் சர்வதேச அளவில் தேவை அதிகரித்து வருகின்றது. ஆனால் உற்பத்தியானது சரிவினைக் கண்டுள்ளது. இந்தியாவின் ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்களுக்கான சந்தையானது தற்ப்போது 4% ஆக உள்ளது. இது அடுத்த சில ஆண்டுகளில் 7 – 8% வரையில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய காரணங்கள்

முக்கிய காரணங்கள்

குறிப்பாக சீனாவில் உற்பத்தி குறைப்பானது, இந்தியவுக்கு வாய்ப்பினை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகீறது. தற்போதுஇ சர்வதேச அளவில் அதிகரித்துள்ள விவசாய பொருட்களின் விலையானது, நிறுவனங்களின் வருவாயினை அதிகரிக்கலாம். இது மார்ஜின் விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். தற்போது தேவையும் மீண்டு வந்து கொண்டுள்ளது. ஆக இதுவும் நிறுவனங்களின் வளர்ச்சிக்க்கு சாதகமாக அமையலாம்.

 இரு இலக்கில் வளர்ச்சி

இரு இலக்கில் வளர்ச்சி

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது சர்வதேச அளவில் சப்ளை சங்கியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இது நிறுவனங்கள் இரு இலக்கில் வளர்ச்சி காரணமாக அமையலாம் என ஷேர்கான் கணித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

sharekhan says to buy these chemical & agri stocks

Companies in the chemical and agricultural sectors have been recording strong earnings for the last few consecutive quarters. Due to this the companies continue to have strong margins.

Story first published: Wednesday, June 8, 2022, 20:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.