`2021-22 ல் நடந்த 500+ குழந்தை திருமணங்கள்… குழந்தைகளை மீட்டுவிட்டோம்!’- தமிழ்நாடு அரசு

கொரோனா முதல் அலையின்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், 511 பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது தற்போது தமிழ்நாடு அரசுக்கு தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் 2020 மார்ச் மாதம் தனது பாதிப்புகளை காட்டத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் அரசால் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடக்கப்பட்டு நோய்த்தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதனால் பலருக்கு சொந்த ஊரிலேயே சென்று தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதில் பல குடும்பத்தினர் அவர்களின் வீடுகளுக்குள் அடைந்து கிடந்த நிலையும் இருந்தது. இதுபோன்ற சூழ்நிலைகள் வீட்டிலிருந்த பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர் தங்களின் உறவினர்களைக் கண்டறிந்து திருமணம் செய்து வைக்கும் அவலநிலையும் அரங்கேறியது. அப்படி கொரோனா காலத்தில் வந்த முதல் அலையின்போது மட்டும், பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற 511 குழந்தை திருமணம் தற்போது தெரியவந்துள்ளது. அவற்றிலிருந்து மாணவியர் மீட்கப்பட்டுள்ளனர்.
image
முன்னதாக கடந்த கல்வியாண்டில் (2021-22) இடைநிற்றலில் ஈடுபட்ட 18 வயதிற்கு உள்பட்ட மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் 18 வயதிற்கு உள்பட்ட மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கு வீடு வாரியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்தான் இந்த விவரங்கள் யாவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க… `9,000 ஆசிரியர் பணியிடங்கள் காலி; அதிகரிக்கும் ஓராசிரியர் பள்ளிகள்’- அதிர்ச்சி தரவுகள்
குழந்தைத் திருமணம் செய்து கொண்டு இடையில் நின்ற 511 மாணவிகளை, அவர்களின் ஆசிரியர்களே கண்டறிந்துள்ளனர். அவர்களை மீண்டும் அழைத்து சென்று பள்ளியில் சேர்த்து உள்ளனர். இவர்களைப் போலவே கொரோனா தாக்கத்தினால் மாணவர்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாகப் படிப்பை நிறுத்தி விட்டு விலகிச் சென்றுள்ளனர் அவர்களையும் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
image
கொரோனா காலத்தில் பள்ளி மாணவிகளுக்கு நடைபெற்ற 511 குழந்தை திருமணம் மாணவிகள் திருமணத்தைப் பொருத்தவரை எட்டாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர் திருமணம் நடத்திவைத்துள்ளனர். அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக அதிக அளவில் நடைபெற்று வந்த குழந்தைத் திருமணங்கள் குறைந்திருந்தன. ஆனால் தற்போது பள்ளிக்கல்வித் துறை நடத்திய ஆய்வில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று உள்ளது தெரிந்துள்ளது. பதினோராம் வகுப்பில் 417 மாணவிகளும்; பன்னிரண்டாம் வகுப்பில் இரண்டு மாணவிகளும்; பத்தாம் வகுப்பில் 45 மாணவிகளும்; ஒன்பதாம் வகுப்பில் 37 மாணவிகளும் குழந்தை திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் பதிமூன்று வயதை கடந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டிருந்தது பள்ளிக்கல்வித்துறையின் ஆய்வில் கண்டறியப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.