AAI Recruitment: விமானத்துறையில் 400 காலியிடங்கள்; பி.எஸ்சி, பி.இ., பி.டெக் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

AAI recruitment 2022 for 400 Junior Executive jobs apply soon: இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.07.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Junior Executive (Air Traffic Control)

காலியிடங்களின் எண்ணிக்கை : 400

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணிதம் அல்லது இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:  14.07.2022 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம் : ரூ. .40000-3%-140000 (வருடத்திற்கு ரூ. 12 லட்சம்)

தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்: IBPS RRB PO, Clerk 2022: பட்டப்படிப்பு தகுதிக்கு 8,106 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் ஆன்லைனில் https://www.aai.aero/en/recruitment/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1000 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு ரூ.81ஆக உள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advt%20No.%2002-2022.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.