Free Youtube Premium: சியோமி நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு சிறந்த பரிசை வழங்க யூடியூப் உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
வழக்கமான Xiaomi ஸ்மார்ட்போன் பயனர்கள் 3 மாதங்களுக்கு இலவச YouTube Premium சந்தாவைப் பெறுவார்கள். உங்களிடம் இதற்கு நிறுவனத்தின் சியோமி 12 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 11 ப்ரோ, சியோமி பேட் 5 போன்று பிற போன்கள் இருந்தால் இந்த சலுகையை அனுபவிக்க முடியும்.
USB-C: 2024 முதல் யுஎஸ்பி டைப்-சி மட்டும் தான் இருக்கும்!
இந்த யூடியூப் பிரீமியம் சந்தா சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். சியோமி வாடிக்கையாளர்கள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் பிப்ரவரி 2023 வரை யூடியூப் பிரீமியம் சந்தாவை பயன்படுத்த முடியும்.
இலவச யூடியூப் பிரீமீயம் சந்தா கிடைக்கும் போன்கள்
சியோமி, யூடியூப் உடனான தனது கூட்டாண்மையை அறிவித்துள்ளது. இந்த விளம்பர சலுகை பிப்ரவரி 2023 வரை இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
சியோமி 12 ப்ரோ 5ஜி (Xiaomi 12 Pro 5G), சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ், சியோமி 11ஐ 5ஜி, சியோமி 11டி ப்ரோ ஆகிய போன்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 3 மாதங்களுக்கு இலவ யூடியூப் பிரீமியம் சந்தா கிடைக்கும்.
யூடியூப் விளம்பரங்களால் எரிச்சலடைகிறீர்களா – இத படிங்க முதல்ல!
மேலும், ரெட்மி நோட் 11 ப்ரோ+, ரெட்மி நோட் 11 ப்ரோ (Redmi Note 11 Pro), ரெட்மி நோட் 11டி, ரெட்மி நோட் 11, ரெட்மி நோட் 11எஸ், சியோமி பேட் 5 பயனர்கள் 2 மாதங்களுக்கு இலவசமாக யூடியூப் பிரீமியம் சேவையை அனுபவிக்க முடியும்.
யூடியூப் பிரீமியம் கட்டுபாடுகள்
பயனர்களுக்கு சில கட்டுபாடுகளும் இந்த சேவையில் விதிக்கப்பட்டுள்ளன. யூடியூப் பிரீமியம், யூடியூப் மியூசிக் பிரீமியம், யூடியூப் ப்ளே மியூசிக் ஆகியவற்றின் சேவை பலனை அனுபவிக்காத பயனர்களுக்கு மட்டுமே விளம்பரச் சலுகை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
Paytm: மொபைல் ரீசார்ஜ் செய்தால், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேடிஎம்!
விளம்பரக் காலம் முடிந்த பிறகும் சேவையைத் தொடர விரும்பினால், பயனர்கள் மாதம் ரூ.129 செலுத்த வேண்டும். விளம்பரக் காலம் முடிந்த பிறகு பயனர்கள் YouTube Premium சந்தாவை ரத்து செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
YouTube Premium மூலம், பயனர்கள் YouTube இல் விளம்பரமில்லா ஸ்ட்ரீமிங் மற்றும் ஆஃப்லைன் கன்டென்டுகளை பார்க்க முடியும். கூடுதலாக, பயனர்கள் தங்களுக்குப் பிடித்த வீடியோக்களை பின்னணியில் இயக்க முடியும்.