iOS 16: பயனர்கள் சேவைகளை எளிதாக வழங்க ஆப்பிள் முடிவெடுத்துள்ளது. அதன்படி தனது புதிய ஐஓஎஸ் 16-இல் பல முக்கிய அம்சங்களை நிறுவனம் சேர்த்துள்ளது. அதன்படி, இப்போது சேமித்து வைத்திருக்கும் பாஸ்வேர்டுகளை பார்க்க முடியும்.
மேக் கணிகளில் நாம் பயன்படுத்தும் வைஃபை பாஸ்வேர்டுகள் மறந்துவிட்டால், செட்டிங்ஸ் பக்கத்தில் சென்று அவற்றை நம்மால் பார்க்க முடியும். ஆனால், ஐபோனில் இந்த அம்சம் இல்லாமல் இருந்தது.
வைஃபை பாஸ்வேர்டுகளை பார்க்கும் வசதி
இதனால் சில நேரங்களில் வைஃபை பாஸ்வேர்டுகளை நண்பர்கள் கேட்கும்போது, பயனர்கள் செய்வதறியாமல் திணறுவர். இனி அந்த கவலை வேண்டாம். நீங்கள் உள்நுழையும் பாதுகாப்பு அம்சமான பேஸ் அன்லாக் அல்லது டச் ஐடியைப் பயன்படுத்தி இந்த பாஸ்வேர்டுகளை பார்க்கவோ, பிறருடன் பகிரவோ முடியும்.
ஆப்பிள் தற்போது ஐஓஎஸ் 16 பீட்டா பதிப்பை சோதனை செய்துவருகிறது. லைட் டெக்ஸ்ட் அம்சம், பகிரும் ஐகிளவுட் லைப்ரரி, ஆப்பிள் பே லேட்டர், லாக் ஸ்கிரீன் என பல புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
USB-C: 2024 முதல் யுஎஸ்பி டைப்-சி மட்டும் தான் இருக்கும்!
ஐபோன் 8 மாடலுடன் சேர்த்து, அதற்கு பிந்தைய அனைத்து ஆப்பிள் ஐபோன்களுக்கு புதிய ஐஓஎஸ் 16 அப்டேட் கிடைக்கும். விரைவில் நிறுவனம் இதன் பீட்டா பதிப்பை வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வருட இறுதிக்குள் இந்த அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் ஸ்டேபிள் வெர்ஷனாக கிடைக்கும்.
புதிய ஐஓஎஸ் 16 அம்சங்கள்
ஆப்பிள் ஐமெசேஜில் மின்னஞ்சல்களில் உள்ளது போன்று, படித்த மெசேஜ்களை, ‘படிக்கவில்லை’ என்று அமைக்க முடியும். பல தளங்களில் உள்ள அம்சங்களை ஒரே இடத்தில் நிறுவனம் கொண்டுவந்துள்ளது பயனர்களுக்கு பல தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கிறது.
Aadhaar Card: ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் பிடிக்கவில்லையா? இப்படி செய்தால் மாற்றலாம்!
குறுஞ்செய்திக்கு பதிலாக iMessages செய்தியாக இருந்தால், பயனர்கள் அதை மீண்டும் திருத்தலாம் அல்லது அழிக்கலாம். இது வாட்ஸ்அப் தளத்தில் உள்ளது போன்ற அம்சமாகும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
மேலும் ஆப்பிள் வாலட் செயலியானது புதிய பே லேட்டர் அம்சத்தைப் பெறுகிறது. இது அமெரிக்காவில் உள்ள Apple Pay பயனர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தடையற்ற கடன் சேவையை வழங்குகிறது. விரைவில் இந்த சேவை உலகளவில் விரிவுபடுத்தப்படும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.