Oppo Reno 8 5G: பதிவு தளங்களில் கிடைத்த ஒப்போ ரெனோ 8 5ஜி போன் அம்சங்கள்!

ஒப்போ நிறுவனம், மே மாதம் ஒப்போ ரெனோ 8 சீரிஸ் போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது, இந்த தொடர் போன்களை இந்திய சந்தைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 8 ப்ரோ பிளஸ், ரெனோ 8 ப்ரோ, வென்னிலா ரெனோ 8 ஆகிய போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன. அதில், வென்னிலா ரெனோ 8 போன், இந்திய பதிவு தளங்களில் காணப்பட்டுள்ளது.

என்பிடிசி பதிவு தளத்தில் போனின் அம்சங்கள் வெளிப்பட்டுள்ளன. இதுமட்டும் இல்லாமல், Reno 8 போன், BIS, EEC, GCF, FCC, TKDN போன்ற சான்றிதழ்களையும் பெற்றுள்ளது. இந்தியாவில், ஜூன் மாத இறுதியில் இந்த போன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

iOS 16: இனி ஆப்பிள் போனில் இதையும் பார்க்கலாம்!

பதிவு தளங்களில் கிடைத்த தகவல்கள்

CPH2359 மாடல் எண்ணுடன் கூடிய Reno 8 ஆனது NBTC தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது போனின் பெயரை Oppo Reno 8 5G என உறுதிப்படுத்துகிறது.

மேலும், அதே சாதனம் FCC இல் 2,250mAh இரட்டை செல் கொண்ட பேட்டரி திறனை வெளிப்படுத்துகிறது. அதாவது போன் மொத்தமாக 4,500mAh பேட்டரியை வழங்கும்.

ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ColorOS 12.1 கொண்டு இந்த போன் இயக்கப்படும் என்பதை FCC தரவுத்தளம் உறுதிப்படுத்துகிறது. ஒப்போ ரெனோ 8 5ஜி மொபைல் 7.67 மில்லிமீட்டர் மெல்லியதாகவும் 179 கிராம் எடையுடனும் இருக்கும் எனத் தெரிகிறது.

ஒப்போ ரெனோ 8 அம்சங்கள் (Oppo Reno 8 Specifications)

வென்னிலா ரெனோ 8 5ஜி போனானது, 90Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் 6.43 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும். கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 இதன் பாதுகாப்புக்காக கொடுக்கப்படும். 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வரை இந்த டிஸ்ப்ளே ஆதரிக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 12ஜிபி வரை LPDDR4x ரேமும், 256ஜிபி வரை UFS 3.1 ஸ்டோரேஜ் மெமரியும் கொடுக்கப்படலாம். ஒப்போ ரெனோ 8 5ஜி போனானது, மீடியாடெக் டைமென்சிட்டி 1300 சிப்செட் கொண்டு இயக்கப்படும்.

Aadhaar Card: ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் பிடிக்கவில்லையா? இப்படி செய்தால் மாற்றலாம்!

ஒப்போ ரெனோ 8 கேமரா (Oppo Reno 8 Camera)

ஸ்மார்ட்போனின் கேமராவைப் பொருத்தவரை, 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் பிளாக் & வைட் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கிய டிரிப்பிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

USB-C: 2024 முதல் யுஎஸ்பி டைப்-சி மட்டும் தான் இருக்கும்!

முன்பக்கம், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்படலாம். வைஃபை 6, ப்ளூடூத் 5.2, NFC, டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகளையும் இந்த போன் பெறும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

இரட்டை செல் கொண்ட 4,500mAh பேட்டரி திறன் இதில் இருக்கும். இதனை ஊக்குவிக்க 80 வாட் வரை பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்படும். கூடுதல் அம்சமாக இதில் MariSilicon X Chip பொருத்தப்பட்டிருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.