POCO F4: போக்கோ F4 போனுல உங்களுக்கு தேவையான எல்லாம் இருக்கு!

POCO F4: இந்த வாரத்தில் போக்கோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று கூறியிருந்தது. அந்தவகையில், வதந்தியாக மட்டும் இருந்த போக்கோ எஃப் 4 போனை சந்தைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான டீசர்களின்படி, நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து விதமான அம்சங்கள் அடங்கியதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

Free Youtube Premium: இந்த போன் இருந்தா… யூடியூப் பிரீமியம் இலவசம்!

கேமிங் அல்லாத அனைத்து விதமான பல் பணிகளுக்கும் இந்த போன் ஏற்றதாக இருக்கும் என கசிந்த தகவல்கள் உறுதிபடுத்தி இருக்கின்றன. கேமிங் போனாக போக்கோ F4 GT சந்தையில் களமாடி வருவது நினைவுக்கூரத்தக்கது.

நிறுவனம் முன்பாக இந்த போனின் டிஸ்ப்ளே மற்றும் சவுண்ட் குறித்த ஒரு டீசரை வெளியிட்டிருந்தது. இந்த போன் இந்திய சந்தையில் விரைவில் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வரும் சூழலில், இது சியோமி ரெட்மி K40s வகை போனின் மறுபதிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் போக்கோ F4 அம்சங்கள் (Poco F4 Expected Specifications)

வெளிவரும் புதிய போக்கோ F4 ஸ்மார்ட்போனில், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் ஃபுல் எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே இருக்கும். மேலும், ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI POCO ஸ்கின் கொண்டு ஸ்மார்ட்போன் இயக்கப்படும்.

திறன்மிக்க குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி புராசஸர் கொடுக்கப்படும். பழைய புராசஸர் என்றாலும், இது பயனர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெற்ற நடுநிலை பிரீமியம் சிப்செட் ஆகும்.

Poco C40: ஜூன் 16 அன்று தடம்பதிக்கும் போக்கோவின் 6,000mAh பேட்டரி போன்!

போக்கோ F4 போனில் 6ஜிபி ரேம், 128ஜிபி உள்ளடக்க சேமிப்பு வழங்கப்படும். பின்பக்கம், 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட கேமரா, அதனுடன் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கிய மூன்று கேமராக்கள் கொண்ட அமைப்பு இருக்கும்.

முன்பக்கம் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்படும். இதிலிருக்கும் டால்பி அட்மாஸ் தரத்திலான ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் நல்ல ஒலித்திறனை வெளிப்படுத்தும். மேலும், பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொடுக்கப்படும்.

Oppo: 13ஜிபி ரேமுடன் வெளியான ஒப்போ போன் – விலையும் ரொம்ப கம்மி தான்!

போக்கோ எஃப்4 ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4,500mAh பேட்டரியும், இதனை ஊக்குவிக்க 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் பயனர்களுக்குக் கிடைக்கும் என்று தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன.

எதிர்பார்க்கப்படும் போக்கோ F4 விலை (Poco F4 Expected Price in India)

ரெட்மி K40S ஸ்மார்ட்போனை வைத்து போக்கோ F4 விலையை கணக்கிட்டு பார்க்கும்போது, சீனாவில் இதன் விலை ரூ.22,000 ஆக இருக்கிறது. எனவே, போக்கோ F4 போன் இந்தியாவில் ரூ.22,999 என்ற விலையில் அறிமுகமாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.