இந்திய பொருளாதாரத்தைக் கூறுப்போடும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மே மாதத்தில் இருந்து 2வது முறையாக ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது ஆர்பிஐ. இந்த வட்டி விகிதத்தை உயர்த்தாவிட்டால் விலைவாசி மட்டும் அல்லாமல் ரூபாய் மதிப்பும் அதலபாதாளத்தைத் தொட்டு விடும்.
இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் முடிவடைந்த பின்பு இன்று சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்கிகளின் கடனுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரித்து 4.90 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஒருவரின் கடனுக்கான ஈஎம்ஐ விலை எவ்வளவு உயரும் தெரியுமா..?
ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு.. யுபிஐ- கிரெடிட் கார்டு பயனர்களுக்கு குட் நியூஸ்!
ஹோம் லோன்
உங்களின் வீட்டுக் கடனில் 7 சதவீத வட்டியில்30 லட்சம் ரூபாய் அசல், 20 வருடம் டென்யூர்-க்கு அடிப்படையாக வைத்துக்கொண்டு புதிய வட்டியை கணக்கிட்டால் உங்கள் ஈஎம்ஐ 23,259 ரூபாயில் இருந்து 24,907 ரூபாயாக அதிகரிக்கும்.
தற்போதைய வட்டி விகிதம் மூலம் மாத ஈஎம்ஐ 1648 ரூபாய் அதிகரிக்கும். இன்னும் எளிமையாகக் கூற வேண்டும் என்றால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 55 ரூபாய் அதிகரிக்கும்.
வாகன கடன் (கார் லோன், பைக் லோன்)
வீட்டுக் கடனை போலவே வாகன கடன் 10 -10.9 சதவீத வட்டியில் 7 வருட காலத்திற்கு 8 லட்சம் ரூபாய் கடன் வைத்திருப்பவர்களுக்கு மாத ஈஎம்ஐ தொகை புதிய வட்டி அடிப்படையில் 13,281 ரூபாயில் இருந்து 13,656 ரூபாயாக உயரும்.
இதன் மூலம் உங்களின் ஒரு மாத ஈஎம்ஐ தொகை 375 ரூபாய் அதிகரிக்கும்.
பர்சனல் லோன்
பர்சனல் லோன் வாங்கியவர்கள் 14 -14.9 சதவீத வட்டியில் 5 வருட காலத்திற்கு 5 லட்சம் ரூபாய் கடன் வைத்திருப்பவர்களுக்கு மாத ஈஎம்ஐ தொகை புதிய வட்டி அடிப்படையில் 11,634 ரூபாயில் இருந்து 11,869 ரூபாயாக உயரும்.
இதன் மூலம் உங்களின் ஒரு மாத ஈஎம்ஐ தொகை 235 ரூபாய் அதிகரிக்கும்.
ஈஎம்ஐ தொகை
ஒவ்வொரு கடனுக்கும், ஒவ்வொரு வங்கிகளிலும் வட்டி விகிதம் மாறுபடுவதால் உங்களின் ஈஎம்ஐ தொகையைக் கணக்கிட எளிமையான வழியைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் உங்களுக்கு வழங்குகிறது.
https://tamil.goodreturns.in/emi-calculator.html
வங்கிகள்
ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை உயர்த்தினாலும் வங்கிகள் கைகளில் தான் எவ்வளவு உயர்த்த வேண்டும் என்ற முடிவு உள்ளது. அதிலும் குறிப்பாகப் பல கோடி மக்கள் நம்பியிருக்கும் வங்கி வைப்பு நிதிக்கான வட்டி விகித உயர்வு வங்கிகளில் கைகளில் தான் உள்ளது.
மே மாத உயர்வு
மே மாதம் ரெப்போ விகித உயர்வுக்குப் பின்பு கடனுக்கான வட்டியை பல வங்கிகள் 0.35 சதவீதம் வரையில் உயர்த்திய நிலையில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மிகவும் குறைந்த அளவிலேயே உயர்த்தியுள்ளது.
புதிய கடன்
மேலும் புதிதாகக் கடன் வாங்குவோருக்கான வட்டி விகிதத்தை விரைவில் வங்கிகள் அறிவிக்கும், அதன் அடிப்படையில் கணக்கிடப்படும். இல்லையெனில் ப்ளோடிங் வட்டி விகிதத்தின் அடிப்படையில் கடனுக்கான வட்டி விகிதத்தை மாற்றப்படும்.
How much your EMI will jump per lakh of loan After RBI hiked Repo rate to 4.90 percent
How much your EMI will jump per lakh of loan After RBI hiked Repo rate to 4.90 percent ஆர்பிஐ அறிவிப்புக்குப் பின்.. உங்க ஈஎம்ஐ எவ்வளவு உயரும் தெரியுமா..?