சமீபத்தில் ரியல்மி நிறுவனம் வெளியிடும் ஸ்மார்ட்போன்கள், அனைத்து தரப்பு பயனர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக உள்ளது. டிசைன், வடிவமைப்பு என முன்னிலை வகிக்கும் நிறுவனம், புதிதாக ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் பட்ஜெட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.
இந்த புதிய பட்ஜெட் பிரண்ட்லி ரியல்மி நார்சோ போன் இந்தியாவில் ஜூன் மாத இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சரியான தேதி குறித்து தகவல் வெளியாகவில்லை என்றாலும், இந்த வாரத்தில் போன் வெளியீட்டுக்கான அறிவிப்பு வரலாம் என்று தெரிகிறது.
iOS 16: இனி ஆப்பிள் போனில் இதையும் பார்க்கலாம்!
ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் அம்சங்கள் (Realme Narzo 50i Prime Specifications)
மொத்தம் மின்ட் கிரீன், டார்க் ப்ளூ என இரு நிறத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம். மேலும், 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் மெமரி, 4ஜிபி + 64ஜிபி மெமரி கொண்டு இரண்டு வேரியன்டுகளில் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் களம்காணலாம்.
உலகளவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை 130 டாலராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் புதிய ரியல்மி பட்ஜெட் மொபைல் ரூ.10,000க்கும் கீழ் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
Poco C40: ஜூன் 16 அன்று தடம்பதிக்கும் போக்கோவின் 6,000mAh பேட்டரி போன்!
ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் போன் அம்சங்கள், இதன் பழைய நார்சோ 50ஐ வகை ஸ்மார்ட்போனை ஒத்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், புதிய ரியல்மி போனில், மீடியாடெக் சிப்செட் பயன்படுத்தப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
ரியல்மி நார்சோ 50ஐ அம்சங்கள் (Realme Narzo 50i Specifications)
கடந்த 2021 ஆம் ஆண்டு ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன் வெளியானது. இதில் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே வழங்கப்பட்டிருந்தது. இந்த போனில் 2ஜிபி, 4ஜிபி என இரண்டு ரேம் வேரியண்டுகள் இருந்தன.
Realme GT Neo 3T: 80W பாஸ்ட் சார்ஜிங்; அல்ட்ரா புராசஸர் – புதிய ரியல்மி போன் எப்படி இருக்கு!
ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஸ்கின், 8 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 5 மெகாபிக்சல் சென்சார், Unisoc 9863 புராசஸர் போன்ற அம்சங்களை ரியல்மி நார்சோ 50ஐ போன் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
இதில் இருந்து சற்று மேம்படுத்தப்பட்ட பதிப்பாக புதிய பிரைம் வெர்ஷன் வெளியாகும். அதன்படி, மீடியாடெக் சிப்செட், இன்னும் பெரிய கேமரா வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.