ஃபீனிக்ஸ் பறவை போல் செத்து பிழைத்த பாட்டா: எப்படி தெரியுமா?

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடர்ச்சியாக மூன்று நிதியாண்டுகள் கடும் நஷ்டத்தை சந்தித்த பாட்டா நிறுவனம் தற்போது லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது பெரும் ஆச்சரியம்தான்.

ஒரு சில நிறுவனங்கள் திவால் ஆகி விட்டது என்று முடிவு செய்து அதன் முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து இருப்பார்கள்.

ஆனால் ஏதேனும் திடீர் திருப்பம் நடந்து அந்த நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு நிறுவனம்தான் பாட்டா இந்தியா.

126 வருட பாட்டா வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்தியர் தலைவராகியுள்ளார்..! #Bata

நஷ்டம்

நஷ்டம்

கடந்த 1995ஆம் ஆண்டு ஒரு சிறிய நஷ்டத்தை சந்தித்த இந்த நிறுவனம், அதன்பின் மீண்டாலும், கடந்த 2002, 2003 மற்றும் 2004 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் கடுமையான நஷ்டத்தை சந்தித்தது. இதனால் பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் இந்தியாவின் பாட்டா இந்தியா தலைமை பொறுப்பை மெர்சிலோ விலாகிரான் என்பவர் பொறுப்பேற்றார்.

ஆச்சரிய மாற்றம்

ஆச்சரிய மாற்றம்

இவருடைய தலைமையின் கீழ்தான் பாட்டா இந்தியா மிக ஆச்சரியமான மாற்றத்தை ஏற்படுத்தியது. முதலில் அவர் செய்தது பாட்டா இந்தியாவில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பதை பல ஷோரூம்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பிரச்சனைகளை அறிந்து, அந்த பிரச்சினைகளை பேசி முடிக்காவிட்டால் நிறுவனம் காணாமல் போகும் என்பதை தனது சக அதிகாரிகளுக்கும் அவர் புரியவைத்தார்.

யூனியன்
 

யூனியன்

முதலில் நிறுவனத்தின் யூனியன் பிரச்சனை. யூனியன்களின் விதிகளால் பாட்டா இந்தியா ஷோரூம்கள் எட்டு மணி நேரம் மட்டுமே திறந்திருக்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமை திறந்திருக்காது என்றும் ஒரு ஷோரூமில் பணியாற்றும் பணியாளர்கள் மற்ற ஷோரூம்களுக்கு பணிமாற்றம் செய்ய கூடாது என்று யூனியன் நிபந்தனை விதித்து இருந்தது. பிஸியான வியாபாரம் நடக்கும் இடங்களில் கூட ஞாயிற்றுக்கிழமை கடைகள் திறக்காமல் இருப்பது, வாடிக்கையாளர்களை கவனிக்காமல் இருப்பது ஆகியவை தான் விற்பனையில் கடும் தேக்கத்திற்கான காரணம் என்பதை அவர் கண்டுபிடித்தார். இதனையடுத்து இந்த பிரச்சனையை தீர்க்க அவர் அதிரடியாக விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் 1,500 பணியாளர்கள் வெளியேறியதாக தெரிகிறது.

ஹவாய் செருப்பு

ஹவாய் செருப்பு

இதனை அடுத்து லாபம் இல்லாத பொருட்களை தயாரிப்பதில் நிறுத்தினார். குறிப்பாக ஹவாய் செருப்பு பொதுமக்களிடம் அதிக வரவேற்பு பெற்று இருந்தாலும் அதனால் பெரிய லாபம் இல்லை என்பதை புரிந்து கொண்டு அதன் உற்பத்தியை நிறுத்தினார்.

செலவு

செலவு

அதேபோல் நஷ்டத்தில் இயங்கி வந்த கடைகள் என்னென்ன என்பதை தேர்வு செய்து அந்த ஸ்டோர்களை அதிரடியாக மூடினார். சில ஷோரூம்களின் இடங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் காரணமாக பாட்டா இந்தியா நிறுவனத்தின் செலவு மிகப்பெரிய அளவில் குறைந்தது.

கமிஷன் திட்டம்

கமிஷன் திட்டம்

இதன் பிறகு அவர் செய்த ஒரு விஷயம் தான் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுதான் கமிஷன் திட்டம். இந்த கமிஷன் திட்டத்தின் மூலம் பாட்டா இந்தியா ஷோரூமை நடத்த யார் வேண்டுமானாலும் வரலாம் என்றும் இடம், வாடகை, விற்பனை பொருள்கள் அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றும் விற்பனையில் கமிஷன் என்றும் அறிவிப்பு வெளியானது.

இளைஞர்கள்

இளைஞர்கள்

இந்த அறிவிப்பு காரணமாக இளைஞர்கள் பலர் பாட்டா இந்தியா ஷோரூம்கள் திறக்க முன்வந்தனர். கமிஷன் அடிப்படையில் வருமானம் என்பதால் ஷோரூமை நடத்துபவர்கள் விற்பனையில் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் நிறுவனத்திற்கு ஊழியர்களின் சம்பளம் உள்பட ஒருசில செலவு குறைந்து நிறுவனம் லாபத்தை நோக்கி சென்றது.

பெண்கள் - குழந்தைகள்

பெண்கள் – குழந்தைகள்

இதனை அடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான என தனி பிரிவு அமைக்கப்பட்டது. இந்த பிரிவின் மூலம் நிறுவனம் மீண்டு எழுந்து ஒரே வருடத்தில் 40 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்றது.

இளம் வாடிக்கையாளர்கள்

இளம் வாடிக்கையாளர்கள்

பேட்டா இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் இருந்து லாபத்தை நோக்கி சென்ற பின்னர் மெர்சிலோ விலாகிரான் தனது சொந்த நாடான மெக்சிகோவுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் பாட்டா இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக சந்தீப் கட்டாரியா நியமனம் செய்யப்பட்டார். இவர் இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் செயல்பட்டார். குறிப்பாக 10 முதல் 14 வயது உடையவர்களுக்கு புதுப்புது டிசைன்களில் செருப்புகள் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு தான் இந்த நிறுவனம் வளர்ச்சி பாதைக்கு சென்றது. தற்போது இந்த நிறுவனம் அசைக்க முடியாத அளவில் இருப்பதற்கு காரணம் இந்த நிறுவனத்தின் சி.இ.ஓக்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How did Bata succeed in recovering from the Great loss?

How did Bata succeed in recovering from the Great loss? | ஃபீனிக்ஸ் பறவை போல் செத்து பிழைத்த பாட்டா: எப்படி தெரியுமா?

Story first published: Thursday, June 9, 2022, 7:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.