டெல்லியின் லஜ்பத்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஆயினும் தீயணைப்புத் துறையினர் உதவியால் அங்கு குடியிருந்த 80க்கும் மேற்பட்டோர் காயம் ஏதுமின்றி உயிர்த்தப்பினர்.
சரியான திட்டமிட்டு எட்டுத் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடின. அதே வேளையும் யாருக்கும் காயம் ஏற்படாதவகையிலும் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விபத்துத் தொடர்பாக கட்டட உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.