அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு: உள்ளூர் மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவு


அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் குறைந்தபட்சம் 3 பேர் உயிரிழந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் பொதுமக்களை பீதி அடைய வைத்து இருக்கும் நிலையில், தற்போது மேரிலாந்தின் ஸ்மித்ஸ்பர்க் பகுதியில் உள்ள கொலம்பியா மெஷின் இன்க் இன் தொழிற்சாலையில் வியாழன்கிழமை நடத்தபட்ட  துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் பதற்றத்தை அந்த பகுதிகளில் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் துப்பாக்கி சூடு நடத்திய நபரை பொலிஸாரால் உடனடியாக அடையாளம் காணமுடியாத நிலையில், குறைந்தது 3 பேர் உயிரிழந்து இருப்பதாக மாநில காவல்துறை உறுதிபடுத்தி உள்ளது என ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை துல்லியமாக மாநில காவல்துறை தெரிவிக்கவில்லை என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மேரிலாந்தின் அமெரிக்க பிரதிநிதி டேவிட் ட்ரோன் தெரிவித்துள்ள ட்விட்டர் குறிப்பில், ஸ்மித்ஸ்பர்க்கில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து தங்களது அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், களத்தில் இருக்கும் அதிகாரிகளுடன் தொடர்ந்து இணைப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு: உள்ளூர் மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

கூடுதல் செய்திகளுக்கு: மரண தண்டனை வழங்கிய ரஷ்யா: கதிகலங்கி நிற்கும் பிரித்தானிய வீரர்கள்!

அத்துடன், யாரேனும் உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு அருகாமையில் இருந்தால், உடனடியாக அந்தப் பகுதிகளில் இருந்து தள்ளி இருக்குமாறும் டேவிட் ட்ரோன் தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.