அம்பானி மீண்டும் முதலிடத்திற்கு திரும்பியது எப்படி.. அதானி பின்னடைவு ஏன்?

இந்தியாவின் இருபெரும் தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள்.

ஃபோர்ப்ஸ்-ம் ரியல் டைம் பில்லியனர் அறிக்கையின் படி முகேஷ் அம்பானி சர்வதேச அளவில் 6வது பெரிய பணக்காரர் ஆவர். இவரின் சொத்து மதிப்பு சுமார் 103.20 பில்லியன் டாலராகும்.

7 வருடமாக சேர்த்தது வெறும் 8 மாதத்தில் பறிபோனது: இந்திய பங்குச்சந்தை..!

இதே கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 101.1 பில்லியன் டாலருடன் ஏழாவது இடத்திலும் உள்ளார்.

அதானி Vs அம்பானி

அதானி Vs அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழும நிறுவனம் பங்குகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதானி குழும நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் மே 6, 2022 அன்று 2.47 லட்சம் கோடி ரூபாய் சரிவினைக் கண்டு, 13.95 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 0.98 லட்சம் கோடி அதிகரித்து. 18.72 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

 

அதானி குழும பங்குகள் சரிவு

அதானி குழும பங்குகள் சரிவு

அதானி குழுமத்தின் அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலையானது 37% சரிவினைக் கண்டுள்ளது. இதே அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு 29% சரிவும், அதானி போர்ட்ஸ் 8.50% சரிவிலும், அதானி எண்டர்பிரைசஸ் 0.99% ஆகிய நிறுவனங்கள் சரிவில் காணப்படுகின்றன. அதானி டோட்டல் கேஸ், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் பங்குகள் முறையே 1.73%, 2.30% மற்றும் 4.87% அதிகரித்துள்ளன.

ஏற்றம் காணலாம்
 

ஏற்றம் காணலாம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் மார்ஜின் விகிதம் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியினால் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அதானி குழும பங்குகள் ஓவர்வேல்யூ மதிப்பில் இருப்பதால் சரிவினைக் கண்டுள்ளது. இது இன்னும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சில்லறை விற்பனை, டெலிகாம் அனைத்து துறைகளிலும் மேம்பட்டு வருகின்றது. இது மேற்கொண்டு பங்கு விலை ஊக்குவிக்கலாம்.

சாதகமான காரணியா?

சாதகமான காரணியா?

எண்ணெய் சுத்திகரிப்பாளர்கள் சந்தையில் தொடர்ந்து, நல்ல வருவாயினை ஈட்டி வருகின்றனர். இது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவன வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அதானி குழும பங்குகளில் புராபிட் புக்கிங் இருக்கலாம். இது அதானி குழுமத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani Vs Ambani: How did Ambani return to the top spot?

Mukesh Ambani, chairman of Reliance Industries, has moved back to the top spot as shares of Adani Group have seen a decline.

Story first published: Thursday, June 9, 2022, 16:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.