உத்திரப் பிரதேச மாநிலத்தில் இஸ்லாமிய ஃபக்கிரிகள் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
நபிகள் நாயகம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் பெண் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து அவரையும், அவரது கருத்துக்கு ஆதரவாக டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் பதிவிட்டதை அடுத்து அவர்கள் இருவர் மீதும் பாஜக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் பாஜகவினரின் மதவெறுப்பு பேச்சுக்கு சர்வதேச அளவில் இஸ்லாமியர்களிடையே கடுமையான கண்டனங்களை பெற்று வருகிறது.
இது தொடர்பான பரபரப்பே இன்னும் அடங்கிடாத நிலையில் உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய ஃபக்கிரிகள் மூவரை வழிமறித்து “நீங்களெல்லாம் எப்போதும் ஆதார் கார்டை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் தாக்கப்படுவீர்கள். ஜிஹாதிகள், பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவீர்கள்” என வாலிபர்கள் சிலர் மிரட்டிய சம்பவம் கொண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட திங்குர் கிராமத்தில் அரங்கேறியிருக்கிறது.
इस वीडियो में एक युवक इन फ़क़ीरों से उनका आधार कार्ड पूछता है साथ ही आतंकवादी जैसे शब्द का प्रयोग भी करते हुए दिख रहा है… pic.twitter.com/Spdz1a8Y19
— Ashraf Hussain (@AshrafFem) June 8, 2022
மேலும் கையில் குச்சியை வைத்துக்கொண்டு அவர்களை தீவிரவாதிகள் என அழைத்தோடு இஸ்லாமியர்களை தோப்புக்கரணம் போட வைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிடச் சொல்லியும் அந்த வாலிபர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள்.
இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், இஸ்லாமியர்களிடம் மதரீதியாக தவறாக நடந்துக்கொண்ட நபர்களை கைது செய்திருப்பதாக கொண்டா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ALSO READ:
நபிகள் குறித்து சர்ச்சை கருத்து: பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா சஸ்பெண்ட்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM