ஆன்லைன் செயலி கடன் மோசடி: ரிசர்வ் வங்கியில் புகார் அளிக்கலாமா?

ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியவர்கள் மிரட்டப்பட்டால் ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்கலாமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்துள்ளார்.

தற்போது ஆன்லைன் செயலி மூலம் மிக எளிமையாக கடன் வாங்கும் வசதி வந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் கடனுக்கான வட்டி பலமடங்கு பெற்று வருவதாகவும் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது பல்வேறு விதமான டார்ச்சர்கள் செய்யப்பட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

36 லட்சம் செலவு செய்த 16 வயது சிறுவன்.. ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமை..!

டார்ச்சர்

டார்ச்சர்

குறிப்பாக கடன் வாங்கியவர்களின் முகத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களிலும், கடன் வாங்கியவரின் உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. மேலும் இந்த டார்ச்சரை தாங்க முடியாமல் ஒருசிலர் தற்கொலை முடிவுக்கு சென்ற சோகமான நிகழ்வுகளும் நடந்துள்ளன.

ஆன்லைன் செயலி கடன்

ஆன்லைன் செயலி கடன்

இந்த நிலையில் ஆன்லைன் மூலம் கடன் அளிக்கும் செயலிகள் செய்யும் மோசடி குறித்து ரிசர்வ் வங்கியில் புகார் செய்யலாமா? என்ற கேள்விக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் பதிலளித்துள்ளார். ஆன்லைன் மூலம் கடன் அளிக்கும் பல செயலிகள் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யவில்லை என்றும், ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யாதவர்கள் மீது ரிசர்வ் வங்கி எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் கூறினார்.

புகார்
 

புகார்

ரிசர்வ் வங்கிக்கு ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் ஏராளமான புகார்களை அனுப்பி வருகிறார்கள் என்றும் அந்த புகார்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுக்க முடியாது என்றும் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்திருந்த செயலியாக இருந்தால் கண்டிப்பாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்த செயலிகள்

பதிவு செய்த செயலிகள்

மேலும் ரிசர்வ் வங்கி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் எந்தெந்த நிதி நிறுவனங்கள், செயலிகள் தங்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்கள் இருக்கின்றது என்றும், கடன் வாங்குவதற்கு முன்னர் அவற்றை படித்து பார்த்து நம்பகத்தன்மை உள்ள நிறுவனத்தில் மட்டும் கடன் பெற்றால் மேற்கண்ட பிரச்சினை எதுவும் வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போலீஸ் புகார்

போலீஸ் புகார்

ஆனால் அதே நேரத்தில் ஆன்லைன் செயலி செய்யும் மோசடி உள்ளூர் போலீசாரிடம் அல்லது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தால் அவர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வங்கியில் பதிவு செய்த செயலி மற்றும் நிதி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டால் எங்களிடம் தாராளமாக புகார் அளிக்கலாம் என்றும் அந்த புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reserve bank of india says about online app debit complaints

Reserve bank of india says about online app debit complaints | ஆன்லைன் செயலி கடன் மோசடி: ரிசர்வ் வங்கியில் புகார் அளிக்கலாமா?

Story first published: Thursday, June 9, 2022, 14:17 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.