ஆப்கான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி எடுத்து சென்ற பணம் எவ்வளவு தெரியுமா

ஆகஸ்ட் 15 அன்று தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்தபோது அஷ்ரஃப் கனி, அவரது நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் சிலருடன் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச் சென்றார். 

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறும் போது தன்னுடன் ஒரு மில்லியன் டாலர்களுக்கும் குறைவான பணத்தை எடுத்துச் சென்றதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. SIGAR (ஆப்கானிஸ்தான் புனரமைப்புக்கான சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெனரல்), ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு பற்றி விசாரிக்கும் நிறுவனம், வெளியிட்ட ஆதாரங்களின்படி, மூன்று ஹெலிகாப்டர்களில் அஷ்ரஃப் கனி $500,000 எடுத்துச் சென்றார்என்று கூறுகிறது.

ஆகஸ்ட் 15 அன்று தலிபான்கள் காபூலில் நுழைந்தபோது, ​​​​அஷ்ரஃப் கனி, அவரது நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் சிலருடன் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அதிபர் மாளிகை, தேசிய பாதுகாப்பு கவுன்சில், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பல முன்னாள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அவர்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சிகார் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. இது தொடர்பாக அஷ்ரப் கனியிடம் சில கேள்விகளை அனுப்பியதாகவும், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை என்றும் அமெரிக்க ஏஜென்சி கூறுகிறது.

மேலும் படிக்க | இலங்கை வழியில் செல்லும் பாகிஸ்தான்… கிரிக்கெட் வீரரின் அதிர்ச்சி ட்வீட்

முன்னதாக, முன்னாள் அதிபர் மொஹமட் அஷ்ரப் கனி மற்றும் அவரது உயர்மட்ட ஆலோசகர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் போது உஸ்பெகிஸ்தானுக்கு பல மில்லியன் டாலர்களை எடுத்துச் சென்றதாக பல ஊடகங்களில் செய்திகள் வந்ததாக சிகார் தலைவர் ஜான் சோப்கோ தெரிவித்துள்ளார்.

எனினும், முந்தைய கூற்றுகளுக்கு மாறாக, முன்னாள் அதிபரும் அவரது கூட்டாளிகளும் பல மில்லியன் டாலர்களை எடுத்துச் செல்லவில்லை என்று நிறுவனம் கூறுகிறது. மேலும் அதிபர் மாளிகையை நோக்கி தலிபான்கள் சென்றபோது, ​​இந்த தொகையை விநியோகிப்பது தொடர்பாக, மெய்க்காவலர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதாகவும், மேலும் இந்த பணம் அங்கிருந்து அதிபர் மாளிகையில் பயன்படுத்தப்படும் மூன்று முதல் நான்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை கலைத்ததன் மூலம் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்ததாக தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் (என்டிஎஸ்) குற்றம் சாட்டியதாகவும் சிகார் அறிக்கை கூறியது. 2021ம் ஆண்டில் NDS நடவடிக்கைகளுக்காக $70 மில்லியன் ரொக்கம் ஒதுக்கப்பட்டதாக சிகார் கூறுகிறது. இதில் பெரும்பகுதி தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் கடைசி நாட்களில், இந்த தொகை மக்களிடையே விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் ஆயுதங்களை வாங்கவும், உள்ளூர் மட்டத்தில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும் என்ற நோக்கில் இவை மக்களுக்கு கொடுக்கப்பட்டன என கூறப்பட்டுள்ளது. 

முன்னாள் அதிபர், அவரது மனைவி மற்றும் சிலரை உஸ்பெகிஸ்தானில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அழைத்துச் செல்ல, ஒரு விமானத்திற்கு 120 ஆயிரம் டாலர்கள் வழங்கப்பட்டதாகவும், அதே தொகையில் இருந்து இந்த பணம் செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காபூலில் இருந்து வெளியேறும் போது அஷ்ரப் கனி தன்னுடன் 3 ஹெலிகாப்டர்களில் 60 மில்லியன் டாலர்களை எடுத்துச் சென்றதாக சில ரஷ்ய ஆதாரங்கள் அந்த நேரத்தில் வெளிப்படுத்தின. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை முன்னாள் அதிபர் மறுத்துள்ளார்.

மேலும் படிக்க | கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்… கை விரித்த சீனா…

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.