இதையெல்லாம் 'சுழல்' டிரெயிலரில் கவனிச்சீங்களா? #SuzhalOnPrime

மிரட்டுகிறது சுழல் டிரெயிலர்! விக்ரம் வேதாவிற்கு பிறகு எங்கே போனார்கள் புஷ்கர்-காயத்ரி என்ற கேள்விக்கு வெயிட்டான பதில் சுழல். ஜூன் 17 அன்று அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள சுழல் – தி வொர்ட்டெக்ஸ் வெப் சீரிஸுக்கு கதை-திரைக்கதை எழுதியதுடன் தயாரிக்கவும் செய்துள்ளனர். மிஸ்ட்ரி இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் சுழலின் கதைக்களம் மர்மங்களின் புதைநிலம்! எட்டு எபிசோடுகளாக இதனை வெளியிடுகின்றனர்.

கவனத்தை இழுக்கும் சுழல்…

கைவிட்டு எண்ணக்கூடிய அளவிலான நபர்கள் வாழும் ஒரு சிறிய கிராமம். அந்தக் கிராமத்தில் காணாமல் போகும் ஓர் இளம் பெண். தங்கையைத் தேடும் அக்கா – இது ஒருபுறம். கிராமத்தில் ஒரு ஃபேக்டரி. போராட்டம், போலீஸ், தள்ளுமுள்ளு – இது மறுபுறம். இதற்கிடையே கிராமத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண விசாரணையில் ஈடுபடும் காவலர்கள். இவை டிரெயிலரில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் சாராம்சம்… ஆனால் ‘இல்லை, இல்லை… நிச்சயம் இங்கு ஏதோ மிகப்பெரிய மர்மம் மறைந்துள்ளது!’ என்று எண்ண வைப்பதுதான் சுழல் டிரெயிலர் நமக்கு தரும் ஹின்ட்.

வாய்ஸ் ஓவர் கூறுவதைக் கேட்டீங்களா?

ஆயிரம் செவிகள் திறக்கும், ஆயிரம் கண்கள் விழிக்கும், ஒரே அணு அசைய, ஆயிரம் கதைகள் பிறக்கும். ஆயிரம் கைகள் முறுக்கும், ஆயிரம் குழிகள் பறிக்கும், செல்லப் பொய்யை காக்க, ஆயிரம் உண்மை புதைக்கும். பூமி சுழலும், இதத்தை தேடி நெருப்பைத் தொட்டால் சாம்பல் மட்டுமே மிஞ்சும். ஒரு பிடி இதயம் அடக்கும் ரகசியம் எத்தனை எத்தனை லட்சம். இருள் வாழாத நெஞ்சம் எல்லாம் தடம் இல்லாமல் போகும். சட்டத்திற்கு வளைந்த நியாயம் கேள்விக்குறியாகும்!

சுழல்

பின்னணி குரல் கூறும் இந்த வரிகள், கதையைப் பற்றி இலை மறை காயாகவே சொல்கின்றன. (உங்களுக்கு ஏதாவது புரிந்தால் கீழ கமென்ட் பண்ணுங்க!) ஆயிரம், செவிகளும் கண்களும் அந்த ஊர் மக்களாக இருக்கலாம். ஒரே அணு அசைய என்பது சீரீஸ் பார்த்தால்தான் தெரியும். அணு என்பது Atom அல்லது உயிரணுவாகக் கூட இருக்கலாம்! இது ஒருவேளை சயின்ஸ் ஃபிக்ஷனா அல்லது சமயம் சார்ந்த மர்மக் கதையா என்று எண்ணத் தோன்றுகிறது. பெண் காணாமல் போவது, நரபலி சம்பந்தப்பட்ட கதையாக இருக்கலாம் என்ற யூகம் டிரெயிலர் பார்த்த பல பேருக்கு நிச்சயம் வந்திருக்கும்.

ஊரே மறைக்கும் ஒரு பொய்யா?

போலீசாக வரும் கதிர், தனக்கு இந்த கிராமத்திலிருக்கும் அனைவரையும் பற்றி நன்றாகத் தெரியும் என்கிரார். ஆனால் அப்படியில்லை, இங்கே இருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஏதோவொரு மர்மம் மறைந்துள்ளது. நிழலான அந்த மர்மம் பற்றி அடுத்தவருக்கு தெரிய வாய்ப்பே இல்லை! சிறிதாக ஆரம்பிக்கும் அந்த மர்ம முடிச்சைப் பிடித்து அதைத் தேடித் போவோரை மீள முடியாத சுழழுக்குள் அது சிக்க வைத்துவிடும் என்ற குறிப்பு, புருவங்களை உயர்த்த வைக்கும் விறுவிறுப்பு.

ஜூன் 17-ல் அவிழ்க்கப்படும் மர்மம்! #SuzhalOnPrime

இயக்குநர்கள் பிரம்மா மற்றும் எம். அனுசரண் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த வலைத்தள தொடரில் பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.

காணாமல் போன பெண் கிடைத்தாளா? ஃபேக்டரியை சுற்றும் மர்ம முடிச்சு என்ன? கிராமத்து மக்களில் யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள்? இதையெல்லாம் போலீஸ் கண்டுபிடித்து, மர்மங்களுக்குப் பின் நிற்கும் அந்த தீய சக்தியை அடையாளப்படுத்தியதா? அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்து, சுவாரஸ்யமான விருந்தாக வரும் ஜூன் 17 அன்று அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது சுழல் – தி வோர்டெக்ஸ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.