டெல்லி:
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது.
பின்னர் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையேயான 2-வது டி20போட்டி வரும் 12-ஆம் தேதி கட்டாக்கில் இரவு 7 மணிக்கு நடக்க உள்ளது.