சமீபத்திய காலமாக கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டுள்ள பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில், உள்கட்டமைப்பு துறையானது மீண்டு வந்து கொண்டுள்ளது.
இந்த உள்கட்டமைப்பு துறை சார்ந்த நிறுவனங்கள் வளர்ச்சி காணலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
அந்த வகையில் ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம் பிஎஸ்பி புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.
இலக்கு விலை
பி எஸ் பி புராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தினை வாங்கலாம் என கணித்துள்ளது. இதன் இலக்கு விலையை ஒரு பங்குக்கு 665 ரூபாயாக தரகு நிறுவனம் கணித்துள்ளது. இந்த நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டில் 2500 – 3000 கோடி ரூபாய் நிதி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முதல் காலாண்டில் 1100 கோடி ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரம்?
இப்பங்கின் CMP விலை என் எஸ் இ-யில் 526.45 ரூபாயாகும். இதன் விலை சற்று குறைந்து, 526.45 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 639.30 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 397 ரூபாயாகும். இதே பி எஸ் இ-யில் 1.97% ஏற்றம் கண்டு, 538 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
1 வருட ஏற்றம்
இப்பங்கின் விலையானது அதன் 52 வார உச்சத்தில் இருந்து 21.38% சரிவில் காணப்படுகிறது. ஆக இந்த நிலையில் இருந்து இப்பங்கின் விலை 27% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 1 வருடத்தில் 24.27% ஏற்றம் கண்டுள்ளது. இதுவே 1 மாதம், 3 மாதங்களில் 4.36% மற்றும் 2.86% ஏற்றம் கண்டுள்ளது. இதே 3 ஆண்டுகளில் -1.93% சரிவினைக் கண்டுள்ளது. இதே 5 ஆண்டுகளில் 97.65% ஏற்றம் கண்டுள்ளது.
வலுவான ஆர்டர்
தற்போது இதன் ஆர்டர் புத்தகத்தின் மதிப்பு 4400 கோடி ரூபாயாகும். உத்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிலில் இருபெரும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டங்களை நடப்பு நிதியாண்டில் நிறுவனம் முடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Axis securities recommendations to buy this infra stock for 27% returns
Axis securities recommendations to buy this infra stock for 27% returns/இந்த உள்கட்டமைப்பு பங்கினை வாங்க பரிந்துரை செய்யும் நிபுணர்கள்.. இலக்கு எவ்வளவு தெரியுமா?