இப்போ வாங்குங்க, அப்புறம் பணம் கொடுங்க: ஆப்பிள் புதிய திட்டம்

பிளிப்கார்ட், ஓலா உள்பட பல நிறுவனங்கள் தற்போது Buy Now Pay Later என்ற முறையை வாடிக்கையாளர்களின் வசதிக்காக கொண்டு வந்துள்ளது.

இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே.

ஓரே நாளில் 3 வங்கி தலைவர்கள் நியமனம்.. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவராக மணிமேகலை..!

அந்த வகையில் தற்போது இந்த முறையை ஆப்பிள் நிறுவனமும் கொண்டு வந்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.

Apple Pay Later

Apple Pay Later

Apple Pay Later எனப்படும் சேவை என்பது இப்போது ஆப்பிள் பொருட்களை வாங்குங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள் என்பது தான். சமீபத்தில் நடந்த 2022 உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் இந்த புதிய சேவை குறித்த அறிவிப்பை ஆப்பிள் வெளியிட்டது. முதல்கட்டமாக இந்த சேவை அமெரிக்காவில் தொடங்கப்பட்டு பின்னர் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

Apple Pay Later

Apple Pay Later

Pay later என்பது முதலில் Apple Wallet இல் கட்டமைக்கப்படும். Apple Pay மூலம் வாடிக்கையாளர்கள் வாங்கும் எந்த ஒரு பொருளுக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு பின் பணம் செலுத்தி கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட தவணைகளுடன் ஜீரோ வட்டி மற்றும் கட்டணங்களுடனும் செலுத்தி கொள்ளலாம்.

தகுதி
 

தகுதி

இருப்பினும் இந்த சேவைக்கு தகுதி பெற ஆப்பிள் முதலில் ஒரு கடன் சோதனை செய்யும். பயனர்களின் நிதி நிலையை கணக்கில் கொண்டு இந்த அம்சத்தை வடிவமைக்கப்படவுள்ளது.

நுகர்வோர்

நுகர்வோர்

நுகர்வோர் நிதி நிலையை கணக்கில் கொண்டும் அதே நேரத்தில் விற்பனை மற்றும் லாபத்தை அதிகரிக்கவும் ஆப்பிள் இதனை முயற்சிக்கிறது. இத்தகைய சேவையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை மற்றும் பிரச்சனைகள் குறித்தும் நுகர்வோர் அறிந்திருக்க வேண்டும்.

விற்பனை அதிகரிக்கும்

விற்பனை அதிகரிக்கும்

ஆப்பிள் அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு மில்லியன்கணக்கானவர்களை இதன் மூலம் ஈர்க்கும் திறன் கிடைக்கும் என்றும், மிகப்பெரிய விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதியால் பயனர்கள் தங்களுக்குத் தேவையான கருவிகளை தேவையான நேரத்தில் வாங்கி பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் பணம் செலுத்தி கொள்ளலாம்.

என்ன பயன்?

என்ன பயன்?

இதில் ஆப்பிளுக்கு என்ன பயன்? ஆப்பிள் பொருட்கள் நிச்சயமான இந்த திட்டத்தால் அடிமட்டத்தை சேர்ந்த வாடிக்கையாளர்களை ஈர்க்கும். ஐபோன் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் விற்பனை மற்றும் லாபமும் அதிகரிக்கும். ஆப்பிளின் வாடிக்கையாளர்கள் பே லேட்டர் சேவையை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கினால் வணிகர்களுக்கும் அது மிகப்பெரிய பலனை தரும்.

அபாயம்

அபாயம்

ஆனால் அதே நேரத்தில் இப்போது வாங்குதல், பின்னர் பணம் செலுத்துதல் சேவை ஒழுங்குபடுத்தப்படாத நிதி நிலை இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நல்லதாக இருக்காது என்பதே உண்மை. நிலையான வருமானம் இல்லாதவர்கள், குறைந்த வருமானம் கொண்டவர்கள் இந்தச் சேவைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்களையும் சிந்தித்து இந்த சேவையை பயன்படுத்த வேண்டும்.

இளையதலைமுறை

இளையதலைமுறை

ஆனால் இந்த திட்டம் நுகர்வோர் உளவியல் கண்ணோட்டத்தில் உடனடியாக ஒரு மனநிறைவை தருகின்றது என்றும் குறிப்பாக இளையதலைமுறைய்னர் இந்த சேவைக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Apple Announces ‘Pay Later’ Service: Here’s How It Works

Apple Announces ‘Pay Later’ Service: Here’s How It Works | இப்போ வாங்குங்க, அப்புறம் பணம் கொடுங்க: ஆப்பிள் புதிய திட்டம்

Story first published: Thursday, June 9, 2022, 17:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.