இந்தியாவில் ஒவ்வொரு வீடுகளில் உள்ள சமையல் அறையில் பயன்படுத்தப்படும் சமையல் பொருட்கள், தினசரி உடல்நலப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு சக்தியாக உள்ளது. நம் முன்னோர்கள் மட்டுமல்ல ஆயுர்வேத பயிற்சியாளர்களும் நம் ஆரோக்கியத்திற்கு உதவ சமையலறை மசாலா மற்றும் மூலிகைகளை தினசரி பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.
அந்த வகையில், ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் டிக்ஸா பவ்சர், பெரும்பாலான இந்திய சமையலறைகளில் எளிதாகக் காணப்படும் வெந்தயம் உணவில் சுவையைச் சேர்ப்பதற்கு மட்டுமல்லாமல், பல நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது என்று கூறியுள்ளார். வெந்தயம் ஒரு நம்பமுடியாத ஆயுர்வேத மூலிகையாகும், இது பெரும்பாலும் ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் பல சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
உணவுகளில் சுவை சேர்ப்பது முதல் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது வரை மலச்சிக்கலைப் போக்குவது, சருமம், முடி மற்றும் ஆரோக்கியத்திற்கு வெந்தயம் பல்வேறு நன்மைகளைத் தருகின்றன” என்று டாக்டர் பவ்சர் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
வெந்தயம் புரதம், கொழுப்புகள், கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், வைட்டமின் A, C, K, B, மாங்கனீசு, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், நார்ச்சத்து மற்றும் நீர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
வெந்தயத்தின் நன்மைகள்
பசியையும் செரிமான சக்தியையும் மேம்படுத்துகிறது. மேலும் தாய்ப்பால் சுரப்பதை ஆதரிக்கிறது. நீரிழிவை கட்டுப்படுத்துகிறது. கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை மேம்படுத்துகிறது.
முடி உதிர்தல், நரை முடி மற்றும் யூரிக் அமில அளவுகளை (கௌட்) குறைக்கிறது. இரத்த அளவை மேம்படுத்துகிறது (இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது), மேலும் இரத்தத்தில் நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது.
நரம்பியல், பக்கவாதம், மலச்சிக்கல், வயிற்று வலி, வீக்கம், உடலின் எந்தப் பகுதியிலும் வலி (முதுகுவலி, முழங்கால் மூட்டு வலி, தசைப்பிடிப்பு) உள்ளிட்ட வாத நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் இது பயனுள்ளதாக இருக்கும்.
இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மார்பு நெரிசல் மற்றும் உடல் பருமன் போன்ற கபா கோளாறுகளை போக்க உதவுகிறது.
வெந்தயத்தை எப்போது தவிர்க்க வேண்டும்?
உடல் சூடாக இருப்பதால் (வானிலை), மூக்கிலிருந்து இரத்தப்போக்கு, அதிக மாதவிடாய் போன்ற இரத்தப்போக்கு கோளாறுகளில் இதைப் பயன்படுத்தக்கூடாது. வெந்தயம் வெப்பத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்டது என்பதால், உடலில் கபா மற்றும் வட்டாவை சமப்படுத்த உதவுகிறது.
வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது?
1-2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் சாப்பிடவும் அல்லது டீயாக குடிக்கவும். 1 டீஸ்பூன் வெந்தய பொடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவுக்கு முன் அல்லது இரவில் வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் எடுத்துக் எடுத்துக்கொள்ளலாம்.
விதைகளை பேஸ்ட் செய்து தயிர்/கற்றாழை ஜெல்/தண்ணீரில் சேர்த்து தலையில் தடவி வர பொடுகு, முடி உதிர்தல், நரை முடி குறையும்.
கருவளையங்கள், முகப்பரு, முகப்பரு தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றில் ரோஸ் வாட்டருடன் தயாரிக்கப்பட்ட வெந்தய பேஸ்ட்டைப் பயன்படுத்துவது உதவியாக இருக்கும்.
“மருத்துவ நோக்கத்திற்காக அதை உட்கொள்ளும் முன் எப்போதும் ஆயுர்வேத மருத்துவரை அணுகுவது சிறந்தது.