சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடனும் கலந்துரையாடினேன். இதன் போது தனக்கு சாதகமான பதில் கிடைத்தள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
அதற்கமைய எதிர்வரும் நாட்களில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடன் உதவிகளை பெற முடியும்.
நான் முடிந்த அனைத்தையும் சிறப்பாக செய்து வருகின்றேன். என்னால் இயலுமான அனைத்தும் செய்யப்படும்.
செப்டெம்பரில் இலங்கைக்கு விடிவு
செப்டெம்பர் மாதமளவில் நாட்டிற்கு தேவையான கடன்கள் அனைத்தும் பெற்றுக் கொள்ள முடியும் என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயத்தின் கடனுதவி கிடைக்கப் பெறுமாயின் 2019ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை இருந்தது போன்ற வழமையான நிலைமைகள் ஏற்படும். எனினும் பொருளாதார ரீதியான பாதிப்புகள் தொடரும், அரச கடன் அதிகரித்துள்ளமை இதற்கான காரணமாகும்.