நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது பாடப்பட்ட “ கப்புட்டு கா கா, பசில், பசில், பசில்” என்ற பாடலே தன்னுடைய தொலைபேசியின் ரிங்டோன் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் தனது தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பது தொடர்பான அறிவித்தலை வெளியிடும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்றை பசில் ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்தார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, தன்னுடைய ரிங்கிங் டோனும் குறித்த பசில் பசில் என்ற பாடல் தான் என குறிப்பிட்டுள்ளார்.
பிரபலமான பாடல்
சிறிது காலத்திற்கு முன்னர் முன்னாள் அமைச்சர் வழங்கிய நேர்காணல் ஒன்றின்போது கப்புட்டாஸ் என காகங்களை விளித்து கூறிய வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் கேலிக்குள்ளாக்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையின்போது நடத்தப்பட்ட பொதுமக்கள் போராட்டங்களில் பசில் ராஜபக்சவை விமர்சிக்கும் வகையில் ஆர்ப்பாட்டக் காரர்கள் கப்புட்டு கா கா பசில் பசில் என கூச்சலிட்டமை ஒரு பாடலாக, பலரும் முனு முனுக்கும் பாடலாக மாறியது.
அத்துடன், மக்கள் போராட்டம் இடம்பெறும் போராட்டக் களத்தில் காகத்தைப் போன்ற உருவங்களுக்கு, குரக்கன் சால்வை அணிவித்து பசில் ராஜபக்சவை கேலி செய்யும் வகையில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.