கடலூர் திமுகவை கதிகலக்கும் ஆடியோ!
25.05.2022 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ‘கலெக்ஷன்.. கமி’சன்’ அரசியல்… எம்.ஆர்.கே மீது குவியும் புகார்கள்’ என்ற தலைப்பில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையை தி.மு.க-வைச் சேர்ந்த பலர் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.
அப்படி பதிவு செய்த ஒரு தி.மு.க தொண்டரை தி.மு.க-வின் முக்கியப் புள்ளி ஒருவரின் வாரிசு செல்போனில் தொடர்புகொண்டு மிரட்டுவதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர் தி.மு.கவை கலக்கும் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ள முழு உரையாடலையும் படிக்க க்ளிக் செய்க…
மணல் கொள்ளை: விசாரணை வளையத்தில் ஓ.பி.எஸ் தம்பி!
பள்ளி கட்டுமானத்துக்கு தேவையான மண்ணை அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து அனுமதியின்றி வெட்டியெடுத்து பயன்படுத்தியதாக, ஆண்டிபட்டியைச் சேர்ந்த பிரபு என்பவர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஆசிரியர்களை அவதிக்குள்ளாக்கிய விடைத்தாள் திருத்தும் பணி!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் எம்.எஸ்.பி.சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் விடைத்தாள் திருத்தும் பணியில் 500 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியைகள் உள்ளனர்.
இது தொடர்பாக விவரங்களை மேலும் படிக்க க்ளிக் செய்க…
முகமது நபிகள் விவகாரம்: இந்தியாவின் நிலைப்பாடும் ஈரான் கருத்தும்…
முகமது நபிகள் தொடர்பாக பா.ஜ.க பிரமுகர்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் சர்வதேச அளவில் பெரும் சர்சையைக் கிளப்பியிருக்கின்றன.
இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்த விவகாரத்தில் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றன. இஸ்லாமிய நாடுகளின் கண்டனத்துக்கு இந்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், நபிகள் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஈரான் தெரிவித்துள்ள கருத்தைப் படிக்க க்ளிக் செய்க…
கி.மு 2ம் நூற்றாண்டில் இறந்தவனின் உடல் 1980களில் கிடைத்த விநோதம்!
சரித்திரம் என்பது எப்போதுமே பல மர்மங்களை உள்ளடக்கியதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. சில சரித்திர ஆய்வாளர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் நம்புவதற்குக் கடினமானவை. அதுவும் செவிவழிச் செய்திகள் இவற்றுடன் கலந்து நம்மை அடையும்போது நம்பகத்தன்மை மேலும் கொஞ்சம் குறையும்.
அதேசமயம் பொய்கள் என்று ஒதுக்க முடியாத அளவுக்கு அவற்றில் பல்வேறு கோணங்கள் இருக்கும். அப்படிப்பட்ட அதிசயங்களையும் மர்மங்களையும், விநோதங்களையும் கொண்ட கி.மு 2ம் நூற்றாண்டில் தொடர்புடைய Lindow Man குறித்த மேலும் சுவாரஸ்ய தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க…
நயன் – விக்கி திருமணம்: போட்டோ ஸ்டோரி…
‘ஜவான்’ படப்பிடிப்பில் இருந்து அப்படியே கிளம்பி வந்த இயக்குனர் அட்லி மற்றும் பாலிவுட் ஸ்டார் ஷாரூக் கான், ரஜினி, சூர்யா என நயன் – விக்கி திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்களின் போட்டோ ஸ்டோரி…
“என்னுடன் நடிக்க மறுத்த நடிகைகள்..” – விஜயகாந்த் #AppExclusive
”பார்வையின் மறுபக்கம் படம் ஊட்டியில் சூட்டிங். ஊட்டி போய்க் காத்துக்கிடந்தோம். ஹீரோயின் வரலை. விசாரிச்சா, என்னோ டெல்லாம் அவங்க நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங் களாம். அதே மாதிரி இன்னொரு ஹீரோயினும் என்னோட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.
இந்த நடிகைகளெல்லாம் இப்படிச் சொன்னதுக்குப் பின்னால் ஒரு பெரிய காரணம் இருந்தது!